சதீஷ் அவ்ளோ வொர்த்தான காமெடியனா? ஒரு டவுட்டு…
ஆலையில்லாத ஊருக்கு, குறட்டைதான் சங்கு என்ற கதையாகதான் இருக்கிறது இந்த விஷயம். கருணாகரன், சதீஷ் போன்றவர்களையும் காமெடி லிஸ்ட்டில் வைத்து போற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. வடிவேலு, சந்தானம், சூரி, அவ்வளவு ஏன்? ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழத்தை இழுத்து கடையையே காலி பண்ணும் அந்த பவுன்ராஜ் உட்பட, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியர்களுக்குதான் வரவும் பற்றும்! அதற்கு முன்பிருந்த கவுண்டமணி, செந்திலெல்லாம் இந்த லிஸ்ட்டில் இல்லாததற்கு காரணம், வேறொன்றுமில்லை…. அவர்கள் மார்க்கெட் போச்சு. அவ்ளோதான்.
ஹீரோக்களை விட காமெடியன்களுக்கான சம்பளம் விண்ணை தொட்டு, நிலா எலும்பை நொறுக்குவதால் மிச்சம் மீதி காமெடியர்களை (நம்பி) போராடிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். அப்படிதான் சதீஷுக்கும் மார்க்கெட் விரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இப்படியா?
வேறொன்றுமில்லை… அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். அப்படி ஒரு சுச்சுவேஷன் வருகிற நேரத்தில், தன்னையே நொந்து கொண்டு படப்பிடிப்பை தள்ளிப் போடுவார் தயாரிப்பாளர். ஆனால் முடிஞ்சா இவனை பிடி படத்தின் தயாரிப்பாளர் அந்த ரகம் அல்ல. பேசிக்கலாக கன்னட படவுலகத்தின் பிரமாண்டமான தயாரிப்பாளரான பாபு, தனக்கு கால்ஷீட் தராமல் சிவகார்த்திகேயனின் ரெமொ ஷுட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த சதீஷை கிட்டதட்ட கடத்திக் கொண்டு வந்துவிட்டாராம்.
இந்தக் கதையை தன் வாயாலேயே சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார் சதீஷ். “பொதுவா ஷுட்டிங்குக்கு வந்து ஆர்ட்டிஸ்ட்டை கூட்டிட்டு போக புரடக்ஷன் மேனேஜர்தான் வருவாங்க. என்னை இழுத்துட்டு போக தயாரிப்பாளரே வந்துட்டார்” என்றார். ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் இந்த தயாரிப்பாளரை பார்த்து ரொம்பவே நெர்வஸ் ஆகிவிட்டாராம் சதீஷ். அருகிலிருந்த சிவகார்த்திகேயன்தான், “ஒரே நேரத்தில் நாலைந்து படங்களில் நடிக்கிற அளவுக்கு நாம பிசியா இருக்கணும்னுதானே கனவு கண்டோம். அந்த கனவு இப்போ நிறைவேறியிருக்குன்னு சந்தோஷப்படுறதை விட்டுட்டு ஏன் டென்ஷன் ஆவுற? போயிட்டு வா…” என்று அனுப்பி வைத்தாராம்.
சதீஷுக்கெல்லாமா இப்படி….? ஹையோ ஹையோ. அதை நினைச்சாதான் சிரிப்பு சிரிப்பா வருது!
Rompa madama eluthatheenga brother..Karunakaranuku ena kuraichal?