புலிப்பார்வை பாடல் வெளியிட்டு விழா – கோஷம் போட்ட மாணவர்களுக்கு தர்ம அடி… பரபரப்பு!
இன்று சென்னை சத்யம் தியேட்டரில் புலிப்பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. பிரபாகரனின் மகன் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போல இந்த படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள், புலிப்பார்வை படத்தையும், மற்றொரு படமான கத்தியையும் வெளியிடக் கூடாது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் புலிப்பார்வை படத்தின் இசை வெளீயீட்டு விழா நடந்தது.
புலிப்பார்வை படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் பேச வரும் வரைக்கும் அமைதியாக காத்திருந்த மாணவர்கள், அவர் பேச மைக்கை பிடித்ததும் தியேட்டரின் மைய பகுதியில் நின்று கொண்டு குரல் எழுப்பினார்கள். விடாதே… விடாதே… புலிப்பார்வை படத்தை விடாதே என்று அவர்கள் கோஷம் எழுப்ப, சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு சுற்றி நின்று கொண்டிருந்த புலிப்பார்வை குழுவினர், கோஷம் போட்ட மாணவர்கள் மீது பாய்ந்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தார்கள். நல்லவேளையாக அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், மாணவர்களை மீட்டு போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர்.
முன்னதாக பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ‘புலிப்பார்வை படத்தில் இயக்குனரின் கற்பனையும் கொஞ்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் தவறில்லை’ என்றார். கத்தி படத்திற்கு ஆதரவளித்த நிலையில், இப்போது புலிப்பார்வை படத்திற்கும் சீமான் ஆதரவளித்து வருவது உலக தமிழர்கள் மத்தியில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அப்படி பார்த்தா இதே கருத்து எல்லா படத்துக்கும் பொருந்துமே. இயக்குனரோட கற்பனையும் சேர்க்கப்பட்டுள்ளது…!!! அப்புறம் ஏன் சில படங்களை மட்டும் எதிர்க்கணும்…???????
செந்தமிழனை செமையா கவனிச்சிட்டாங்க போல…!!!