‘அனிருத் வாங்க…’ அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!
வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரது இசையை ரசித்ததை போல அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பார்களா என்பதெல்லாம் தவுசன்ட் வாலா கொஸ்டீன்ஸ்! இப்பவும் முடிவெடுக்க முடியாமல்தான் திணறிக் கொண்டிருக்கிறாராம் அனிருத். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் நான் அனிருத்தை கவனிச்சிட்டு வர்றேன். அவர்கிட்ட ஒரு ஃபயர் இருக்கு என்றெல்லாம் உசுப்பிவிட்டு போனார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.
அவரே இப்படி சொல்லிவிட்ட பிறகு, தனியாக ஒரு ஐ .எஸ். ஓ சர்டிபிகேட் வேண்டுமாக்கும்? அதே ஷங்கரின் ஐ படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத்துக்கு போன் அடித்தாராம். படத்தில் ஒரு பாடல் இருக்கு. நீங்க பாடினா நல்லாயிருக்கும். வர்றீங்களா என்றாராம். அந்த நேரம் பார்த்து வேலையில்லா பட்டதாரி பின்னணி இசை சேர்ப்பு பணியிலிருந்த அனிருத், போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஓடினாராம். பின்னே சும்மாவா? ரஹ்மான் அழைக்க மாட்டாரா? நாலு வரி பாட மாட்டோமா என்று முன்னணி பாடகர்களே காத்திருக்கும் நேரத்தில், அவரே அனிருத்தை அழைத்தால்?
போனவர் ஒரு பாடலை பாடிக் கொடுத்துவிட்டு வந்ததாக தகவல்.