நதி நீர் இணைப்பு ஒரு கோடி! எப்பவோ டெபாசிட் பண்ணிட்டோமே… ரஜினியின் அண்ணன் பதில்!

ரஜினியின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவரது அண்ணன் சத்யநாராயணா பற்றிய செய்திகளும் வெளிவரும். தம்பிக்காக இப்போதும் அன்பு சுமக்கும் இந்த அற்புதமான அண்ணன், இதுபோன்ற நேரங்களில் தமிழகத்திலிருக்கும் முக்கிய கோவில்களுக்கு ஒரு விசிட் அடிப்பார். எல்லாம் படம் நல்லபடியாக ஓட வேண்டும் என்கிற அக்கறைதான். இந்த முறையும் தமிழகத்திற்கு விசிட் அடித்த சத்யநாராயணா, தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனை வழிபட்டுவிட்டு வெளியே வந்தார்.

வந்தால்…? ஒரே மீடியா வெளிச்சம். அப்புறமென்ன… சில கேள்விகள். அதற்கு பொருத்தமான பதில்கள் என்று செய்தியாளர்களுக்கு செம தீனி.

இந்த விசிட்டின்போது மீடியா கேட்டதென்ன? அண்ணன் சொன்னதென்ன?

“நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் அந்த தொகையை இந்த மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கெடு விதித்துள்ளதே?” இதுதான் கேள்வி.

“நதி நீர் இணைப்பு திட்டத்திற்காக ரஜினிகாந்த் அறிவித்த ரூ.1 கோடி அப்போதே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. அரசு அந்த திட்டத்தை தொடங்கும் போது. அந்த பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றார் சத்யநாராயணா. அப்படியே ரஜினியின் உடல் நலம் குறித்து எழுந்த சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் போனார் இந்த அன்பு அண்ணன்.

“ரஜினி பூரண உடல் நலத்துடன் ஓய்வு எடுத்து வருகிறார். சில நாட்களில் அவர் சென்னை திரும்புவார். கபாலி சிறப்பாக தயாராகி உள்ளது. மிகப் பெரிய வெற்றியை பெற்று சரித்திர சாதனை படைக்கும்”.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நீங்க நினைச்சா விஜய்சேதுபதியே கால்ஷீட் கொடுப்பாரே? பக்குவமாக பதில் சொன்ன இயக்குனர்

அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்... சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்... விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்... கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக்...

Close