பிரமோஷனுக்கு வர மாட்டேன்! கன்வின்ஸ் செய்யப்பட்ட ரஜினி!

எந்திரன் பார்ட் 2 என்று கம்பீரமாக வரவேண்டிய தலைப்பு, சிலபல சிக்கல்கள் காரணமாக 2பாயின்ட்0 ஆன கதைதான் உலகம் அறியுமே? முதல் சிக்கல் முற்றிலும் சிக்கல் என்பதைப் போலவே இந்த படத்தில் கமிட் ஆன நாளில் இருந்தே சுகவீனம் ஆனார் ரஜினி. அவரால் சில விஷயங்கள் செய்யவே முடியாது என்ற நிலையில் படத்தின் கதையையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஷங்கர். வில்லன் அக்ஷய் குமார் தலையில் கொஞ்சமும், கதாநாயகி எமி தலையில் கொஞ்சமும் அதிகப்படுத்தப்பட்டன. பளுவை குறைத்துக் கொண்ட ரஜினி, பிரஷர் ஏதும் இல்லாமல்தான் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு கண்டிஷனோடு.

படத்தின் பிரமோஷனுக்கு என்னை அழைக்கக் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். 2 பாயின்ட் 0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினால் அவர் வரவே மாட்டார். அதுவே மும்பையில் என்றால் கன்வின்ஸ் செய்தாவது அழைத்துக் கொள்ளலாம் என்று கருதியும், அக்ஷய் குமாரின் மும்பை ரசிகர்களை கவரவும்தான் இந்த விழாவே மும்பையில் நடத்தப்பட்டுள்ளது. நினைத்தது போலவே, ரஜினியின் கட் அவுட்டுகளை குறைத்துக் கொண்டு, அக்ஷய் குமாருக்கு அதிகப்படியாக விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக கூறுகிறார்கள். முன்னதாக மகள் சவுந்தர்யா மூலம் ரஜினியை நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கன்வின்ஸ் செய்தார்களாம்.

சுமார் 400 கோடி கலெக்ஷனை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 2பாயின்ட்0 அக்ஷய் குமாரின் இந்தி ரசிகர்களாலும், ரஜினியின் தமிழ் ரசிகர்களாலும் நிரப்பப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு இருக்கிறது. என்னதான் பரபரப்பாக மும்பையில் கூடினாலும், ஷங்கரின் டெக்னிகல் டீம் சொதப்பியதால் மொத்த விழாவுமே சொதப்பல் ஆனதாக முணுமுணுக்கிறார்கள் இங்கிருந்து அங்கு சென்று வந்தவர்கள்.

நிகழ்ச்சியை சென்னையில் வைத்திருக்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் ஃபீல் செய்து கொண்டிருக்க, மும்பையில் நடத்தியதை போல சென்னையிலும் ஒரு விழாவை நடத்திவிடலாம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாம். நடக்கும்… ஆனால் ரஜினி வர மாட்டார். வழக்கம் போல அவரது டிஜிட்டல் பிம்பத்தை பார்த்தே “தலைவா…” என்று கூச்சலிடதான் ரசிகர்கள் இருக்கிறார்களே… அப்புறம் என்ன கவலை. நடத்துங்க ஷங்கர்!

 

1 Comment
  1. Rajesh says

    Sir…seems stomach burning startrd for you for the first look itself…great?? or someone paid you for such news..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Adhiti Stills Gallery

Close