ரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்!
ஒழிந்தது திரும்ப வராத மணித்துளிகள்.
இனி சேனல்களை திறந்தால் மக்கள் பிரச்சனைகளை கேட்கலாம். பேசலாம். யோசிக்கலாம். இன்னும் நிறைய நிறைய லாம்… லாம்… லாம்! கடந்த சில நாட்களாகவே “தமிழனின் சோறு தண்ணி பிரச்சனையே நடிகர் சங்கத்தில் விஷால் ஜெயிப்பாரா, மாட்டாரா? ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்திற்கு கொடுத்தது கடனா, பிச்சையா? பாக்யராஜின் கோபத்திற்கு ஆளான நாசர், அடுத்த ஜென்மத்திலாவது மனுஷனாக பிறந்து மக்கள் போற்ற வாழ்வாரா?” போன்ற கேள்விகளை எழுப்பி வந்த ஊடகங்கள், இந்நேரம் தண்ணீர் குடித்து தன் விரதத்தை முடித்திருக்கும்.
சுமார் மூவாயிரத்து சொச்சம் நடிகர்களின் பிரச்சனையை நாட்டு பிரச்சனையாக மாற்றிய ஊடகங்களுக்கு மக்கள் என்னதான் முரட்டு சாபம் கொடுத்தாலும், விஷால் அணிக்கு ரஜினி கொடுத்த சாபத்தையும் பேசிதான் ஆக வேண்டும்.
தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார்… இன்னமும் தன் வியாபாரத்தை டாப்பில் வைத்திருப்பவர். அகில இந்திய அரசியலும் ரஜினியின் அசைவு குறித்து ஆசைப்படுகிற அளவுக்கு பெரிய மனுஷன்… அவருக்கே இங்கு ஓட்டு இல்லை! மும்பையில் ‘தர்பார்’ ஷுட்டிங்கில் இருந்தவருக்கு பேலட் பேப்பரே போய் சேரவில்லை. பதறியடித்துக் கொண்டு விசாரித்த அவரது பி.ஆர்.ஓ ரியாசுக்கு, “நாங்க அனுப்பிட்டமே… கிடைக்கலையா?” என்று கூலாக பதில் சொன்னது நாசர் அண் விஷால் அண்கோ.
‘இந்த தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் போனது விநோதமான அனுபவம்’ என்று தன் மனக்குமுறலை இறக்கி வைத்திருக்கிறார் ரஜினி. இவருக்கு மட்டுமல்ல, மும்பை மற்றும் வெளியூர்களில் இருக்கும் பல நடிகர் நடிகைகளுக்கு அவர்களின் வாக்குரிமை பறி போயிருக்கிறது.
கே.பாக்யராஜிடம், நீங்கள் தலைவராக வர வாழ்த்துக்கள் என்று ரஜினி கூறியதையும், அவரது வாக்குரிமை பறிபோனதையும் கனெக்ட் செய்து பார்த்தால், இது சதி என்று புரியும். விஷால் அணிக்கு எதிரான பலரது தபால் ஓட்டுகளும் இப்படி செல்லாமல் போனதை யதார்த்தமான செயலாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எதிரணியினர்.
இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துதான் ஓட்டு எண்ணிக்கை நடக்குமாம். அதுவரைக்கும் அந்த பெட்டியை பாதுகாக்க போலீஸ் ட்யூட்டி பார்க்கும். பெட்டி அப்படியே இருக்கிறதா… அதற்குள் பல்லி இறங்கி கக்கா போயிருக்குமே என்றெல்லாம் கவலையுடன் ஊடகங்கள் தன் அடுத்த விவாதத்தை ஆரம்பிக்கக் கூடும்.
தமிழன் தன் பெருமையை விடவே போவதில்லை. நல்லாயிருங்கடா!
நாங்க அனுப்பிட்டமே… கிடைக்கலையா?
Election conduct by election officer. You don’t know anything?
This person has personal agenda against some people.. Like
Vikram, Bala, vishal
Good bless your journalism
கே.பாக்யராஜிடம், நீங்கள் தலைவராக வர வாழ்த்துக்கள் என்று ரஜினி கூறியதையும், அவரது வாக்குரிமை பறிபோனதையும் கனெக்ட் செய்து பார்த்தால், இது சதி என்று புரியும் ???
எத்தனையோ பேர் அறிவுரை கூறியும் இந்த மானம் கெட்ட ஊடகங்கள் அவர்களுடைய கேவலமான வேலையை தான் செய்து கொண்டுஇருக்கிறார்கள்.. குறைந்த பட்சம் சரி பாதி நேரம் கூட அவர்களால் மற்ற செய்திகளுக்காக ஒதிக்கிட முடிய வில்லை, கேட்டால் மக்கள் பார்க்கிறார்கள் எண்டு சப்பைக்கட்டு வேறு… மக்களை அடிமுட்டாள்களாக மாற்றியதே இந்த ஊடகங்கள் தான்.. திரைத்துறை சம்பந்தப்பட்ட ஊடகங்களாக இருந்தாலும் சரியெனலாம்… ஆனால் செய்தி ஊடகங்களாம் கூட.. வேதனையான விஷயம்….
தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் =
1) உண்மையை மறைத்து பொய் செய்திகளை பரப்புவது நல்லவனை கெட்டவனா ஆக்குவது,
2) திருட்டு பயலுங்கள போராளி போல் சித்தரிக்கும்
3) திமுகவின்கைகூலிகளே பத்திரிகையாளரர்கள்
சில முன்னணி நடிகர்கள் சினிமாக்கு வந்து 25 years மேல ஆகுது இளைஞர்கள் ஊடகங்கள் trackers online mediaகள் support இவங்களுக்கு தான் அதிகம் இருந்தும் 200,300 கோடி வசூலுக்கே முக்க வேண்டியிருக்கு 69 வயசுல 1000 கோடி 2000 கோடிய நோக்கி போயிட்டு இருக்காரு தலைவர் ரஜினி
மக்கள் தலைவர் தலைவர் ஆளட்டும்..! மக்கள் ஆட்சி மலரட்டும்.. ?