ரஜினியால் கெட்டோம்! போஸ்டர்! ஆள் கடத்தல்? நான்கு ரஜினி ரசிகர்கள் ‘ உள்ளே ’
“ரஜினியால் கெட்டோம்!” – போராடத்துக்கு தயாராகும் ரஜினி ரசிகர்கள் .. என்பது தலைப்பில் ஜனனம் வார இதழில் இந்த வாரம் கவர் ஸ்டோரி வெளியாகியிருக்கிறது. இதற்கான போஸ்டரை நேற்று முன்தினம் வாணியம்பாடியில் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் வெங்கடேசன், ஜோதி, சரவணன், ராஜேஷ் ஆகியோர் போஸ்டர் ஒட்டிய ஐவரை அடித்து உதைத்தார்களாம். (ஒரு வார பத்திரிகையின் போஸ்டரை ஒட்றதுக்கு எதுக்குப்பா ஐந்து பேர் போனீங்க?) அதோடு, மேலும் சில ரசிகர்களுக்கு போன் செய்து வரவழைத்தார்களாம்.
“ரஜினியால எல்லோரும் வாழறாங்கடா.. அவரையா அவமானப்படுத்துறீங்க..” என்று சொல்லி தாக்கினார்களாம்.
சுமார் இருபத்தி ஐந்து பேர் கொண்ட கும்பல், போஸ்டர் ஒட்டிய ஐவரை, அவர்களது மினி வேனிலேயே அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்களாம். அங்குவைத்தும் போஸ்டர் ஒட்டியவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, அவர்களது செல்போன்களை பிடுங்கினார்களாம். அடிவாங்கியவர்களின் செல்போன் மட்டுமல்ல, தங்க சங்கிலி, வாட்ச் மோதிரம் போன்றவற்றையும் அடித்துப் பிடுங்கியதாக சொல்கிறார்கள்.
மேலும், போஸ்டர் ஒட்டியவர்களின் உறவினர்களுக்கு போன் செய்தது ஒரு லட்ச ரூபாய் தந்தால்தான் இந்த போஸ்டர் ஆட்களை விடுவோம் என்று மிரட்டினார்களாம். அதற்கப்புறம் உறவினர்கள் சுதாதிரித்துக் கொணடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்களாம்.
இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போஸ்டர் அடிதடி வரைக்கும் கூட ஓ.கே. தங்க சங்கலி, ஆள் கடத்தல், ஒரு லட்சம் பணயத் தொகை என்பதெல்லாம் உண்மையா? அல்லது ஜோடிப்பா? எது எப்படியோ, இது ரஜினி படத்தில் வரும் சண்டைக்காட்சியை விட நல்லாயிருக்கும் போல இருக்கே?