ஒரே கதை! கட்டி உருளும் விஷால் சிம்பு!!

ஒரு டெம்ப்பருக்காக கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்கள் செம டெம்ப்பர் ஆகிக் கிடப்பதுதான் இப்போதைய ஹாட்! சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டடித்த படம் ‘டெம்ப்பர்’. ஒரு ரவுடி போலீஸ் ஆகி, அதே ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக செய்வதுதான் இந்த படத்தின் ஒன்லைன். தெலுங்கு காரத்தின் உச்சம் என்று சொல்லப்படும் இந்த படத்தில் ஹீரோவின் அலட்டல் சமயங்களில் பெருத்த எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியொரு கதையில் நடிக்க ஏன் விஷாலும் சிம்புவும் அடித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.

முதலில் இந்த படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிப்பதாகதான் செய்திகள் கசிந்தன. வாலு பட இயக்குனரே இதை ரீமேக் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டு சிம்புவுக்கு இரண்டு கோடி அட்வான்சும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இதே படத்தின் ரீமேக் ரைட்ஸ் உரிமையை பெற்று அதில் நடிக்கவிருக்கிறார் விஷால். இப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் டெம்ப்பர் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார் என்றும், அதை அனல் அரசு இயக்கப் போவதில்லை என்றும் விஷால் தரப்பிலிருந்தே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் சிம்பு டென்ஷன் ஆகிவிடுவாரே? அப்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இது தொடர்பாக சிம்புவிடம் விளக்கம் கேட்ட பிரஸ்சுக்கு, எனக்கு ஒண்ணும் தெரியலைங்க. நீங்க தயாரிப்பாளரைதான் கேட்கணும் என்று முடித்துக் கொண்டார்.

நடிகர் சங்கத் தேர்தல் சமயத்திலிருந்தே விஷாலை சிம்புவும், சிம்புவை விஷாலும் மாற்றி மாற்றி டென்ஷன் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், வழியோட போற சீதேவியை வெறியோட வந்து தாக்குதே டெம்ப்பர்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏ.எம்.ரத்னம் வீட்டில் துக்கம்! போனில் கூட விசாரிக்காத அஜீத்?

‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்....

Close