காவேரிக்காக ரஜினி மோடியிடம் பேச வேண்டுமாம்! இது பார்த்திபனின் ஐடியா!!

இன்னும் எத்தனை காலத்திற்குதான் அவரை உலுக்குவார்களோ? இவ்வளவு கலவரத்திலும், மறக்காமல் ரஜினியின் போஸ்டரில் தீ வைக்கிறான் ஒரு கன்னட வெறியன். அந்தளவுக்கு அவருக்கும் எதிர்ப்பு இருக்கிறது கர்நாடகத்தில்! இங்கோ அவரை இன்னும் இன்னும் குத்திக் கொண்டேயிருக்கிறது ஊர் உலகம்! கிட்டதட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் உப்பை தின்று, தமிழ் காற்றை சுவாசித்து, தமிழ் தண்ணீர் குடித்து, தமிழனாகவே மாறிவிட்ட அவரை இன்னும் எதை சொல்லி உரசிப் பார்க்குமோ தமிழகம்?

“என் மனைவி தமிழச்சிதான். மகள்கள் தமிழச்சிதான். மருமகன் தமிழன்தான். அதற்கப்புறமும் என்ன வேண்டும் தோழர்களே…” என்று அவர் வாய் திறந்து கேட்கப் போவதும் இல்லை. இவர்கள் தங்கள் வாயை மூடப் போவதும் இல்லை. இந்த நிலையில்தான் காவேரி விவகாரத்தில் அவர் மீதிருக்கும் அவசியமற்ற கசப்பில் இன்னும் கொஞ்சம் வேப்பிலை கொழுந்தை பூசியிருக்கிறார் அறிவுசார் பார்த்திபன்.

“பிரதமர் மோடியே ரஜினி வீட்டுக்கு வருகிற அளவுக்கு இருவருக்கும் நட்பு இருக்கிறது. அதை பயன்படுத்தி காவேரி விவகாரத்தில் பிரதமரிடம் ரஜினி பேசினால், விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்” என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.

பார்த்திபனின் ‘அட்வைஸ் அங்காடி’ இதுபோல இன்னும் பல சிந்தனைகளை நாட்டு மக்களுக்கு வழங்கும். சிரிப்பை அடக்கிக் கொண்டு காத்திருங்க மக்கா!

To listen audio click below :-

https://www.youtube.com/watch?v=1Kwymt-4yuI&feature=youtu.be

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐட்டம் டான்ஸ் விஷயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் எரிச்சல்?

குடும்பநல கோர்ட்டுகள் செய்ய வேண்டிய வேலையை, ஒரு ஸ்பீட் போஸ்ட்டை விடவும் வேகமாக செய்து கொண்டிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம், ஆலமரம் இல்லாமல் அவர்...

Close