சந்தோஷ் நாராயணன் லைவ் கான்சர்ட்! நெருப்புடா… ரஜினியே பாடுகிறார்? இது டிசம்பர் மேளா! Exclusive
சூர்யா போட்ட பிள்ளையார் சுழி, அதற்கப்புறம் ரஜினி காம்பவுண்ட், தனுஷ் காம்பவுன்ட், விஜய் காம்பவுன்ட் என்று பரபர கிறுகிறுவென வேகம் பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆணானப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானே தனக்கு பிடித்த யங் இசையமைப்பாளர்களில் ஒருவராக சந்தோஷ் நாராயணன் பெயரை சொல்லிவிட்டபின், கோழி கூடையில் தங்குமா?
ரஹ்மான், இளையராஜா, யுவன் போல live கான்சர்ட் என்று வெளிநாடுகளுக்கு கிளம்ப திட்டம் போட்டுவிட்டார். குறைந்தது நான்கு பெரிய நாடுகளிலாவது இந்த லைவ் மியூசிக் கான்செர்ட்டை வெற்றிகரமாக நடத்தி விடுவது என்று அவரும், அவரது டீமும் வேலைகளை முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியொரு நிகழ்ச்சிக்கு தனது பரிபூரண சப்போர்ட்டை அளிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி.
முதலில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், தனது குரலிலேயே நெருப்புடா பாடலை ரஜினி பாடுவதற்கு சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சி, அநேகமாக டிசம்பர் இறுதியில் நடைபெறலாம் என்பதுதான் நமக்கு கிடைத்த எக்ஸ்க்ளுசிவ்.
கானா பாலாவையும் அழைச்சுட்டு போவீங்களா சார்ங்களா?