ரஜினி வாழ்க்கை வரலாற்றுப் படம்! ரஞ்சித்துக்கு வருமா அதிர்ஷ்டம்?
ரஜினியின் வரலாறு, எத்தனையோ பேருக்கு உந்துதலாகதான் இருக்கும். அதில் சந்தேகமில்லை. அவரது கதை அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், ரஜினியின் கதையை அவரது மகள்களே எழுதுவதுதான் விசேஷம். சவுந்தர்யாவும், ஐஸ்வர்யாவும் எடுக்கிற ரஜினி வரலாற்று பட விஷயம் ஒரே நாளில் உலக ட்ரென்ட் ஆகிவிட்டது. அவரை மற்றவர்கள் பார்ப்பதிலும், அவரது குடும்பமே பார்த்து எழுதுவதற்கும் இருக்கிற வித்தியாசமும், விஷயத் தெளிவும்தான் இந்த படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
இன்னும் அந்த படத்தை இயக்கப்போவது யார் என்பதை மகள்கள் இருவரும் முடிவு செய்யவில்லை. ஆனால் சவுந்தர்யாவின் குட் புக்கில் பா.ரஞ்சித் இருப்பதால், ஒருவேளை அதிர்ஷ்டம் அவருக்கு அடிக்கலாம் என்ற யூகம் அடிபட ஆரம்பித்துவிட்டது. சவுந்தர்யாவின் குட் புக்கில் ரஞ்சித் வந்தது எப்படி?
கோவா படத்தை தனது ஆக்கர் ஸ்டூடியோ சார்பில் சவுந்தர்யாதான் துவங்கினார். அந்த படத்திற்கு வெங்கட்பிரபு இயக்குனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஆக்கர் ஸ்டூடியோ கடன் விவகாரத்தில் தள்ளாட, கோவா படம் துவங்கிய சில நாட்களிலேயே முடங்கிப் போனது. வெயிட் பண்ணுங்க. பிராப்ளம் சால்வ் ஆனதும் ஷுட்டிங் போகலாம் என்று சவுந்தர்யா சொல்ல, வெங்கட்பிரபு கேட்டால்தானே? அவசரப்பட்ட அவர், கோவா படத்தை அப்படியே வேறொரு கம்பெனிக்கு கை மாற்றி விட்டார். அந்த நேரத்தில் வெங்கட் பிரபு சார்பாக சவுந்தர்யாவிடம் பேசப் போனவர் பா.ரஞ்சித். அந்த படத்தின் உதவி இயக்குனர் குழுவில் முக்கிய இடத்திலிருந்தார் பா.ரஞ்சித்.
இவரது அப்ரோச் பிடித்துப்போனதாலும், வெங்கட் பிரபுவை பழி வாங்க வேண்டும் என்பதாலும்தான் கபாலி படத்தை அப்படியே எடுத்து பா.ரஞ்சித் கையில் கொடுத்தார் சவுந்தர்யா. அந்த படம் பல்வேறு சாதி சச்சரவுகளை ஏற்படுத்தினாலும், தாயும் சேயும் நலம் என்பதை போல அமைந்துவிட்டது வெற்றி. அதை மிஞ்சிய கலெக்ஷன் என்று ரஜினியின் புகழில் மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை அணிவித்துவிட்டது.
அந்த சென்ட்டிமென்ட் ப்ளஸ் நம்பிக்கையின் அடிப்படையில், இந்தப்படம் ரஞ்சித்திடம் ஒப்படைக்கப்படலாம் என்பதுதான் இப்போதைய முணுமுணுப்பு.
https://www.youtube.com/watch?v=1Ex1RCoroiM