இன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்! எண்ட அம்மே!
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம்! புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள் அசால்ட்டாக குதித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்று கேரளாவில் மம்முட்டி படம் ஒன்றும், மோகன்லால் படம் ஒன்றும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. ரஜினி கமல் படங்கள் ஒரே நாளில் வந்தால் எப்படியிருக்கும்? அப்படிதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில்தான் சிவகார்த்திகேயனின் ரெமோவும் அங்கு வெளியாகிறது. பொதுவாக விஜய் படங்கள் என்றால் அங்கு ஒரு கொண்டாட்டம் வரும் ரசிகர்களுக்கு. 100 க்கும் குறையாத தியேட்டர்களில் அவரது படம் வெளியாகும். இப்போது அதே எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ரெமோவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதை சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடுதான் கவனிக்கிறார்களாம் அங்கிருக்கும் விஜய் ரசிகர்கள்.
இப்போதைக்கு நேரடி தமிழில்தான் படம் ரிலீஸ். ஒருவேளை ஹிட்டுன்னா, அப்புறம் சிவகார்த்திகேயனும் மூக்கால பேசுற நாள் வந்திருமோ?
To listen audio click below:-