அடியே அடியே – என் வாழ்கையை வீணாக்க பொறந்தவளே

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

வசனம் – சந்துரு
மதன்கார்க்கி, தாமரை பாடல்களை எழுத D.இமான் இசையமைக்கிறார்.
கலை – மிலன் / நடனம் – ஷெரீப் / ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
எடிட்டிங் – ஆண்டனி / தயாரிப்பு நிர்வாகம் – ரமணா , A.K.கார்த்திக்
தயாரிப்பு மேற்பார்வை – K.K.ரவி / தயாரிப்பு வடிவமைப்பு – A.K.சேகர்
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன் .

இந்தப் படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. “ ரோமியோ ரோமியோ “ ஜூலியட் ரோமியோ” என்ற பாடல்காட்சியில் ஜெயம்ரவி – ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா பங்கேற்றனர்.. மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுக்கு இமான் இசையமைத்த இந்த பாடல் காட்சி மிகப் பிரமாண்டமான முறையில் படமாகப் பட்டுள்ளது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பாரீன் டான்சர்கள் பங்கேற்றனர். இந்த பாடலை மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி பாடி இருக்கிறார். அத்துடன் “ அடியே அடியே – என் வாழ்கையை வீணாக்க பொறந்தவளே “ என்ற பாடல் காட்சியில் ஜெயம்ரவி – ஹன்சிகா பங்கேற்க சென்னை அருகே துறைமுகம், காசிமேடு மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் ஏன் வில்லன் ஆனேன்? -ரிச்சர்ட்

ஜெம் எண்டர்டைன்மென்ட் மூவீஸ் J.ரமேஷ் வழங்க எம்.ஜெயகுமார் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “ சுற்றுலா “ என்று பெயரிட்டுள்ளனர். ரிச்சர்ட் ஜானி என்ற வில்லத்தனமான கதாப்பாத்திரம் ஏற்று...

Close