சபாஷ் நாயுடு! தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தாரா கமல்?
பெரியவங்க தப்பு பண்ணினா பெருமாளே தப்பு பண்ணின மாதிரி என்பது விஸ்வரூபம் படம் எடுத்த கமலுக்கா தெரியாது? இப்படிதான் உலகம் கேட்கும். ஆனால் மித மிஞ்சிய தன்னம்பிக்கையா? அல்லது நம்மள மீறி என்ன நடந்துவிடும் என்கிற நினைப்பா? தெரியவில்லை.
ஆனால் கமலின் சபாஷ் நாயுடு படத் தலைப்பு இன்னும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்படவில்லையாம். அட… வேறு அமைப்புகளில் எங்காவது பதிவு செஞ்சிருப்பார் விடுங்கப்பா என்றால், அக்கம் பக்கம் என எங்கும் அந்த தலைப்பை பதிவு செய்யப்பட்டதாக நினைவில்லை என்று கிசுகிசுக்கிறது சங்கங்கள். ஆனால் முப்பதே நிமிஷத்திற்கு முப்பது லட்சம் செலவழித்துவிட்டார் கமல். நடிகர் சங்கத்திற்கு இரண்டரை லட்சம் வாடகை கொடுத்து பிரமாண்டமாக ஒரு செட் போட்டிருந்தார். இந்த ஏசி குளுகுளு செட்டில்தான் இப்படத்தின் துவக்க விழாவே நடந்தது. இதற்காக போடப்பட்ட செட்டின் செலவு முப்பது லட்சம் என்று சிலரும், இல்லையில்லை பதினாலு லட்சம்தான் என்று வேறு சிலரும் கிசுகிசுக்க, தேவையா இந்த செலவு என்று எக்ஸ்ட்ரா அனத்தல்கள் இதே ஏரியாவில்.
இந்த நிலையில்தான் இந்த தலைப்பு பஞ்சாயத்து. ஒருவேளை வேறு யாராவது அதே தலைப்பை பதிவு செய்யப் போனாலும், பண்ணிக்கோங்க என்று சொல்லிவிடவா போகின்றன சங்கங்கள்? அல்லது அப்படி செய்கிற தைரியம்தான் யாருக்காவது வருமா?
கமல்டா!