சிவகார்த்திகேயன் ஸ்லோ! சந்தானம் படு ஸ்பீட்! எங்கே போய் முடியுமோ?
“நண்பேன்டா…” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்… வெண்டைக் காயை போட்டு விளக்கெண்ணையில் பிசைந்த மாதிரி ஆகிவிடும் முகம். ஒரே தொலைக்காட்சியால் உயரத்திற்கு வந்தவர்கள்தான் இருவரும். ஆனால் இவர் ஒரு துருவத்திலும் அவர் ஒரு துருவத்திலும் நின்று கொண்டு நம்பியார் சிரிப்பு சிரிப்பதுதான் நாடு தாங்காத புரட்சி #actorsanthanam #sivakarthikeyan #VijayTv #DhillukkuThuttu #remo #ActionHero #VTVGanesh
எப்படியாவது சிவகார்த்திகேயன் இடத்தை அடைந்துவிட வேண்டும் என்பதுதான் சந்தானத்தின் ஒரே லட்சியமாகவும் இருக்கிறது. மெல்ல காமெடி கூடாரத்திலிருந்து வெளியேறி, தனக்கு வேறொரு இமேஜ் கொடுத்துக் கொள்ள ஆசைப்பட்டாலும், மக்கள் மனசிலிருந்து அவரது நகைச்சுவை பிம்பம் உடைந்தால்தானே? அப்படி உடைய வேண்டும் என்றால், நவீன பொக்லைன்கள் நாலைஞ்சு இருந்தாலும் நடக்காது போலிருக்கே!
அதற்காகதான் புது வேகம் எடுத்திருக்கிறார் சந்தானம். விடிவி கணேஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம், அதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் வேடத்தில் நடிக்கப் போகிறார். ஒருமுறை ஆக்ஷன் ஹீரோவாக வேஷம் போட்டுவிட்டால், அதற்கப்புறம் மம்பட்டி, கடப்பாரை என்று கையில் எடுத்துக் கொண்டு காலம் முழுக்க சுற்றினாலும், அதைவிட பெரிய பைட், அதைவிட பெரிய பைட் என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்குள் இப்படியொரு முடிவை சந்தானம் எடுத்தது அறியாமையா ஆர்வக் கோளாறா என்பதுதான் புரியவில்லை.
ஆனால் சிவகார்த்திகேயன் அப்படியல்ல. நடுவில் புல் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கக் கேட்டு அவருக்கு வந்த கதைகள் எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டார். “நான் இப்பவே ஆக்ஷன் ஹீரோவா ஆகிட்டேன்னா, அதற்கப்புறம் புலி வால் பிடிச்ச மாதிரி அது பின்னால் ஓட வேண்டியதுதான். முதலில் விதவிதமான கதைகளில் நடிப்போம். பிறகு ஆக்ஷன் பக்கம் நோக்கலாம்…” என்கிறார்.
இப்ப சொல்லுங்க யாரு ஸ்லோ? யாரு ஃபாஸ்ட்? எந்த முடிவு நல்ல முடிவு?
To Listen Audio Click Below:-