சந்திக்க முடியாத சந்தோஷ் நாராயணன்! விஜய் படத்திலிருந்து கல்தா கொடுக்க திட்டம்?

நாலு ஸ்டெப் ஏறிட்டா போதும்… ஏறி வந்த அந்த மூணு ஸ்டெப்பையும் முட்டாளாக்கியே தீருவது என்று நடந்து கொள்கிற ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் சந்தோஷ் நாராயணன் போட்டோவையாவது குளோஸ் அப்பில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். மனிதர் இப்போதெல்லாம் அப்படிதான் என்று கவலை கொள்கிறது கலையுலகம். அட… அதை கூட மன்னிச்சிடலாம்ங்க… அவரை சந்திக்க முயற்சி செய்யணும்னா கூட முகலிவாக்கம் ஏரியாவுல இருக்கிற முட்டு சந்து, தட்டுக்கூடையிலெல்லாம் பூந்து புறப்பட வேண்டியிருக்கே என்று அஞ்சுகிறது அந்த பெரும் கூட்டம்.

அவரை படத்தில் கமிட் பண்ணுகிற அத்தனை பேரும் அனுபவிக்கிற அவஸ்தை இன்னொன்று. சந்தோஷ் நாராயணனுக்கென்று தனி செல்போன் இல்லையாம். எல்லாம் இல்லத்தரசியின் கையில்தான். அவர்தான் இவருக்கு மேனேஜரும் கூட. இவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்குள் மேல் மூச்சு வாங்குகிறதாம் சில முன்னணி இயக்குனர்களுக்கே! ஒருவர் இருவராகி, இருவர் அறுவராகி, அறுவர் கோடம்பாக்கம் ஆகி, இப்போது கோடம்பாக்கம் எங்கும் ஒரே குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “சந்தோஷ் நாராயணன் நம்ம படத்துக்கு வேணாம் சார்….!”

“பாட்டெல்லாம் நல்லாதான் இருக்கு. அவரை பார்த்துட்டு வர்றதுதான் கொடூரமா இருக்கு” என்ற புலம்பல் சப்தம் விண்ணதிர கேட்கிறது. விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு இவரை இசையமைப்பாளராக்கலாம் என்று நினைத்திருந்தார்களாம். இப்போது, “எதுக்குய்யா கோட்டானை இழுத்து பொத்தான்ல முடிஞ்சுக்குற? விடு விட்ரு..” என்று ஆளாளுக்கு எச்சரிக்க ஆரம்பித்திருப்பதால், அந்த முடிவில் மாற்றம் வந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

வந்த சீதேவியை காப்பாத்திக்கணும்னா, முதல்ல மனைவி கையிலிருக்கும் போனை வாங்கி தன் பையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறது இன்டஸ்ட்ரி. என்ன செய்யப் போகிறாரோ இசை மேதை?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜி.வி.பிரகாஷ் வழியில் நிற்கும் சசிகுமார்! இதென்னடா வம்பா போச்சு?

கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு...

Close