வழிக்கு வராத ஹீரோக்களை வளைக்கறதுக்கு இதுவும் ஒரு வழி! இப்படியே போனால் உருப்படுமா இன்டஸ்ட்ரி?

அட்டக்கத்தி ஹீரோ ஒன்றும் அப்படியொரு அசகாய சூரன் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை வெற்றிகள்தான். அதற்குள் அவர் தன்னை அஜீத்தாகவே கற்பனை செய்து கொண்டுவிட்டார். அவர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பட விழாவுக்கும் வருவதில்லை. பிரஸ்மீட் என்றால் கண்டு கொள்வதில்லை. இன்டஸ்ட்ரி பெரிய மனிதர்கள் யாராவது தொடர்பு கொள்ள நினைத்தால், நாலு ஜன்டு பாம் நெற்றியில் கரைந்த பிறகுதான், சார் கூப்பிட்டீங்களா? என்ற குரல் வருமாம் தினேஷிடமிருந்து.

இப்படியாகப்பட்ட ஹீரோ நேற்று நடந்த ஒரு நாள் கூத்து படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார். எப்படி? எப்படி? வந்தது எப்படி?

முந்தின நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியை ஸ்கிப் பண்ணும் முடிவில்தான் இருந்தாராம் தினேஷ். அதற்குள் இரண்டு நிருபர்களுக்குள் ஒரு பந்தயம் நடந்தது. “நாளைக்கு நடக்கப் போற நிகழ்ச்சிக்கு தினேஷ் வர மாட்டாருப்பா…” என்று ஒருவரும், “வருவாருப்பா… ஆளு கொஞ்சம் மாறிட்டாப்ல” என்று இன்னொருவரும் நேரத்தை வேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், “தினேஷுக்கே போனை போட்டு கேட்ருவோம்” என்று கூறிவிட்டு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயல… பத்து முறை நடந்த முயற்சிக்கும் ட்ரிங் ட்ரிங்…ஒன்றே பதில். அசடு வழிந்த அந்த சப்போர்ட் நிருபர், ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டார். என்னவென்று?

“மிஸ்டர் தினேஷ். உங்களுக்கு திடீரென மனக்குழப்பம் அதிகரித்து டிப்ரஸ் ஆகிவிட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. அது உண்மையா? செய்தியாக வெளியிடுவதற்காகதான் கேட்கிறேன். தயவு செய்து பதில் அனுப்பவும்”

எஸ்.எம்.எஸ் போய் அடுத்த வினாடியே தினேஷிடமிருந்து போன். சார்… அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன் என்றார். அப்படின்னா நாளைக்கு நடக்கப் போற ஒரு நாள் கூத்து பிரஸ்மீட்டுக்கு வருவீங்களா? இது நிருபர்.

“கண்டிப்பா வருவேன் சார்” என்றார் தினேஷ். சொன்னபடியே வந்தும் விட்டார். ஒருவேளை இந்த சம்பவம் நடக்கவில்லை என்றால்? அவர் வந்திருக்கவே மாட்டார்.

அட சைத்தானுங்களா? பணம் போட்ட ஒரு தயாரிப்பாளரை தவிக்கவிடுற நீங்கள்லாம் சினிமாவுல ஜெயிச்சு யாரை வாழ வைக்கப் போறீங்க? திருந்துங்கப்பா திருந்துங்க!

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    பேட்டா, அந்த ரெண்டு நிருபர்கள் பெயர்கள் துவங்கும் எழுத்து அ அப்புறம் உ. சரியா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்திக்க முடியாத சந்தோஷ் நாராயணன்! விஜய் படத்திலிருந்து கல்தா கொடுக்க திட்டம்?

நாலு ஸ்டெப் ஏறிட்டா போதும்... ஏறி வந்த அந்த மூணு ஸ்டெப்பையும் முட்டாளாக்கியே தீருவது என்று நடந்து கொள்கிற ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் சந்தோஷ் நாராயணன் போட்டோவையாவது...

Close