அயர்ன் பாக்ஸ் தண்ணிக்குள்ள விழுந்திருச்சு! புஸ்ஸ்..ஸான முருகதாஸ்!

சர்கார் கதை திருட்டு விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. பிரச்சனையை கோர்ட்டுக்கு வெளியே சமரசமாக பேசித் தீர்த்துக் கொள்வதாக இரு தரப்பும் கூறிவிட்டார்கள். ஆனால் அதற்குள்தான் எத்தனை எத்தனை திருப்பமும், சமரசமும்?

வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் சர்கார் கதைக்கு உரிமை கொண்டாடி குரல் எழுப்பிய நேரத்திலேயே ஒப்புக் கொண்டிருந்தால் இவ்வளவு அவமானமும் அதிர்ச்சியும் தேவையே இருந்திருக்காது. இப்போது ஊர் உலகமே சேர்ந்து முருகதாசின் இமேஜ் மீது கொத்து பரோட்டா செய்து கொண்டிருக்கிறது. தப்பு பண்ணினா தண்ணி குடிக்கணும். அனுபவி ராஜா அனுபவி என்றெல்லாம் டீசன்ட்டாக சிலர் கமென்ட் போட்டாலும், பல்வேறு கமென்ட்டுகள் நா கூசுகிற ரகம்.

‘திருட்டுப்பட்டம் வாங்கறதுக்காக அப்பா அம்மா என்னை பெத்துப் போடல’ என்று எரிந்து விழுந்த முருகதாஸ், எப்படி ஆஃப் ஆனார்? இன்று நீதிமன்றத்திற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே தீர்ப்பு நமக்கு சாதகமாக வராது என்பதை புரிந்து கொண்டாராம் அவர். சன் பிக்சர்ஸ் சார்பில் முருகதாசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டதாம். ‘பிடிவாதம் வேண்டாம். ரிலீஸ் நேரத்தில் படத்துக்கு பிரச்சனை வந்தால் அது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்’ என்று கூறப்பட்டதாம்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட முருகதாஸ், ‘கதை வருண் ராஜேந்திரன்’ என்று டைட்டில் கார்டில் போட ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து இந்தப்படத்தின் மொழி மாற்று உரிமை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வருணுக்கு கிடைக்கும். அதுவே பல கோடிகள் கொட்டும்.

சரி போகட்டும். இவ்வளவு நெருப்பா பேசுன மனுஷன் பொசுக்குன்னு தண்ணிக்குள்ள விழுந்து ஜில்லுனு ஆயிட்டாரே?

அதுதான் சர்கார் கிளைமாக்சை மிஞ்சுன கிளைமாக்ஸ்!

கடைசி தகவல்- சர்கார் டைட்டில் கார்டில் ‘நன்றி- வருண் ராஜேந்திரன்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்றும் முருகதாஸ்தான்! சில வருடங்களுக்கு முன்பே இந்த தாட் வருணுக்கு வந்ததால்தான் இந்த டைட்டில் கிரடிட்!

இதன் காரணமாக மொழி மாற்று உரிமைக்கான எந்த தொகையும் வருணுக்கு கிடைக்காது. முப்பது லட்சம் ரூபாய் அவருக்கு தரப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அப்படியெல்லாம் பணம் கைமாறவில்லை என்றும் கூறப்படுகிறது.

வராத பணத்திற்கு எதற்காக இவ்வளவு அழுது புரண்டார் வருண் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பின்னணியில் நடந்த பரிமாற்றங்கள் குறித்து இரு தரப்பும் கப்சிப்!

1 Comment
  1. Shankar says

    நாங்க முருகதாஸ் வெறும் 30 லட்சம் தான் திருடுனார்ன்னு நெனைச்சோம். நீங்க சில கோடின்னு சொல்லுறீங்க. இவனை எல்லாம் திகார் ஜெயில்ல புடிச்சு போடணும். அப்ப தான் கதை திருட்டு ஒழியும். இன்னொரு திருடன் அட்லீ எஸ்கேப் ஆயீட்டுருக்கான். பாகியராஜ் சார், அடுத்த கேஸ் ரெடி.

Reply To Shankar
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு புளியம் பழத்துக்காக ஷுட்டிங்கையே நிறுத்திட்டாங்களா? அட… அடடே!

Close