சசிகுமார் மீது சாவு பழி! நட்புக்கு இதுதானா மரியாதை?
“என் நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்!” திருக்குறளை புழிஞ்சு டின் பீர்ல ஊற்றியது மாதிரி, நச் நச்சுன்னு நட்புக்கு விளக்கம் கொடுத்து அசரடிக்கிற ஆள்தான் நம்ம சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்னு தமிழ்சினிமாவின் முக்கியமான இடத்தில் நின்று, தாறுமாறாக சிக்சர் அடித்தவர். அவரைப் பொருத்தவரை இந்த எல்லா பெருமையையும் பின்னுக்கு தள்ளி எப்போதும் முன்னால் வந்து நிற்பது ஒரே ஒரு கிரடிட்தான். “நட்புன்னா அந்தாளு என்ன வேணும்னாலும் பண்ணுவாருப்பா…” என்பதுதான் அது! ஆனால் அருமையான இந்த கே.பி.சுந்தராம்பாள் குரலிலும் பிசிறடிப்பது போல, ஒரு சம்பவம்!
உதயகுமார்! தயாரிப்பு நிர்வாகி. சசிகுமாரின் ஆரம்பகால நண்பன். கடந்த இருபது நாட்களுக்கு முன்பு வரை உசிரோடு இருந்த உதயகுமார், இப்போது வெறும் போட்டோ! இதற்கு காரணமாக திரையுலகத்தில் சொல்லப்படும் நெருடல் என்ன தெரியுமா? “சசிகுமார் மட்டும், தோள்ல கை போட்டு, விட்றா பார்த்துக்கலாம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், நடை பிணமாக கூட வாழ்ந்திருப்பார் உதயகுமார்” என்பதுதான்.
இருபது நாட்களுக்கு முந்தைய பிளாஷ்பேக். சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற மனநிலையோடு திருப்பதிக்கு ரயில் ஏறினார் உதயகுமார். அதற்கப்புறம் அங்கிருந்து ஏதேவொரு ரயிலில் ஏறினார். அது கடலூருக்கு போய் கொண்டிருந்தது. போகும் வழியிலேயே திடீரென கீழே குதித்தார். லேசான காயத்துடன் பிழைத்துக் கொண்டார். பிறகு கடலூரில் லாட்ஜ் ஒன்றில் தங்கியவர் ஃபேனில் தூக்கு மாட்டி இறந்து போனார். அவருக்கு ஒரு மனைவியும், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும். ….ஸ். ஐந்து வயது என்றதும் நினைவுக்கு வருகிறது. ‘சுப்ரமணிபுரம்’ திரைக்கு வந்து கிட்டதட்ட எட்டு வருஷங்கள் ஓடிவிட்டது. அதிலிருந்து கிடாரிக்கு முன்பு வரை சசிகுமாரின் எல்லா படங்களிலும் உதயகுமார் இருந்திருக்கிறார்.
கிடாரியில் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லையே என்று மனசுக்குள் மருகிக் கொண்டிருந்தாராம் அவர். நடுவில் என்னவோ பிரச்சனை இவருக்கும் சசிக்கும். ஒவ்வொரு முறை விளக்கம் கொடுக்க முன் வந்தபோதும் கண்டு கொள்ளவில்லை சசி என்று கூறப்படுகிறது. சரி.. போகட்டும். உதயகுமார் சாவுக்குக் கூட சசிகுமார் வரவில்லை.
அவரது குடும்பம் கேள்வி கேட்டால் என்னாவது என்று யோசித்திருக்கலாம். உச்சத்தில் நின்று உதயகுமாரின் ஆவி கேட்குமே, என்ன பண்ணப் போகிறீர்கள் சசி?
To listen Audio click below:-