முடிஞ்சா கண்டுபிடிங்க… முன் ஜாக்கிரதை சசிகுமார்

பாலா படத்திற்காக சசிகுமார் வைத்திருந்த கெட்டப் எங்கே போனதென்றே தெரியவில்லை. சுந்தரபாண்டியனாகவே ‘தலைமுறைகள்’ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். சசிகுமார் வருவார். அந்த புதிய கெட்டப்பை வளைத்து வளைத்து படம் எடுத்து ‘பாலா படத்தில் சசிகுமார் கெட்டப்’ என்று தமிழகத்தின் தலைப்பு செய்தியை சுட சுட பற்ற வைக்கலாம் என்று காத்திருந்த நிருபர்களுக்கு அவர் தந்தது வழக்கமான ‘என்னண்ணே…’ங்கிற சிரிப்பைதான்,

வந்தவர் தலைமுறைகள் தவிர ஒரு வார்த்தை கூட பாலா படத்தை பேசவேயில்லை. பேச நினைத்த சில நிருபர்களிடம், ‘அண்ணே… அதுக்குன்னு ஒரு தடவ மீட் பண்ணி பேசுவோம். இப்ப தலைமுறைகள் பற்றி மட்டும் பேசுவோம்’ என்று கழன்று கொண்டார்.

அப்புறம் விசாரித்தால்தான் தெரிகிறது. இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்ததுமே அவர் பிரஸ்சை மீட் பண்ண துடித்தாராம். அப்போது அவர் இருந்தது பாலா பட கெட்டப்பில். வேண்டாம்… கொஞ்சம் தள்ளிப் போட்டு ஒரிஜனல் சுந்தரபாண்டியன் ஆன பின்பு சந்தித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கவும்தான் இந்த தாமதமாம்.

ஆத்தாடி… ஒருத்தரோட கெட்டப்பை தெரிஞ்சுக்கறதுகுள்ளே இருக்கிற பில்டப்பும் இடிஞ்சு விழுந்துரும் போலிருக்கே?

Read previous post:
கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு ஏன்? சுட சுட சில பின்னணிகள்

மே 9 ந் தேதி வெளியாகவிருந்த கோச்சடையான் திரைப்படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முன் பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டு உரியவர்களுக்கு பணம்...

Close