விக்ரம் பிரபுவை விக்கிறோம்! ஜமாய்க்கும் சத்யஜோதி!
அன்னை இல்லத்தின் வாரிசு, தமிழ்சினிமாவின் திண்ணை கொள்ளாமல் இடம் பிடிப்பார் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் நடுவில் சில படங்களால் சறுக்கிய வாரிசு, மறுபடியும் சுதாரிப்பதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டார். எதற்கும் நல்ல நேரம் வேண்டுமல்லவா? அந்த நல்ல நேரம் சத்ரியன் மூலமாக வந்திருக்கிறது விக்ரம் பிரபுவுக்கு.
யெஸ்… இந்தப்படம்தான் அவர் நடித்த படங்களிலேயே அதிக அளவில் வெளியிடப்படுகிறதாம். தமிழ்நாட்டில் 300 ஸ்கிரீன்களும், வெளிநாடுகளில் சேர்த்து மொத்தம் 500 க்கும் மேலாக ரிலீஸ்!
திருச்சியை கலக்கிய ரவுடிகளின் கதையை சென்ட்டிமென்ட், ஆக்ஷன், காதல் கலந்து குடும்பம் மொத்தமும் வந்து பார்க்கும் விதத்தில் உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். ஆக்ஷன் ஹீரோக்களை ஆராதித்து மகிழ்வதுதான் தமிழ் ரசிகர்களின் பாணி. விக்ரம் பிரபுவுக்கும் வொர்க்கவுட் ஆகட்டும்!