இருட்டறையில் ஊமைக்குத்து! சீமான் வேல்முருகன்களுக்கு சின்னதாக ஒரு விண்ணப்பம்!

‘ஏண்டா… இதெல்லாம் ஒரு பொழுதுபோக்குதான். இதுக்குப் போய் ஏன் இவ்ளோ சீரியஸ் ஆகுறீங்க?’ என்று முரட்டுக்குத்து ஆசாமிகள் கேட்கக்கூடும். அடேய்… பக்கிகளா… இதே சினிமாவிலிருந்துதான் முதலமைச்சர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது நாடு. அப்படியென்றால், சினிமாவின் சிஸ்டம் முதல்ல ஒழுங்கா இருக்க வேண்டாமா? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழுமல்லவா?

ஒன்றுமில்லை… நேற்று ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ என்றொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அந்த ஏரியாவிலேயே இல்லை. இந்த மாபெரும் காவியத்தை இயக்கிய சந்தோஷ், படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக், நாயகி யாஷினி, யூ ட்யூப் புகழ் சாரா ஆகியோர் வந்திருந்தார்கள். முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரும், பாடல்களும், அதன் வரிகளும் படு பயங்கரம். இந்த எல்லை மீறிலை நியாயப்படுத்திதான் அவ்வளவு பேசினார்கள் அனைவரும்.

ட்ரெய்லரின் ஓப்பனிங்கே நம்ம புளூசட்டை மாறன்தான். ‘சும்மா விட்டாலே இந்த படம் மூணு நாள்தான் ஓடும். தேவையில்லாம கொடி பிடிச்சு ஒரு வாரம் ஓட வச்சுடாதீங்க’ என்று ட்ரெய்லரில் வந்து லந்து கொடுத்தார் மனுஷன். (ஐடியாவெல்லாம் நல்லாதான் இருக்கு)

‘இப்படியெல்லாம் பாலுணர்வை தூண்டுற மாதிரி படம் எடுப்பது குற்றங்கள் மேலும் அதிகரிக்கதான் உதவும்’ என்று ஒரு பத்திரிகையாளர் கவலைப்பட… அதற்கு இயக்குனர் சந்தோஷ் சொன்ன பதில், இங்கு எழுதவே முடியாதளவுக்கு நாராசம். இதற்கு அவருடன் வந்த படக்குழுவினர் கைதட்டி மகிழ்ந்தது தனிக்கதை. சற்று ஓப்பனாக கேள்வி பதில் இருந்தது. இப்படியொரு கேவலமான பிரஸ்மீட் இதற்கு முன் கோடம்பாக்கத்தில் நடந்திருக்குமா என்பதும் டவுட்.

ஒரு புறம் வேல்முருகனும், சீமானும் கொஞ்சமாவது தமிழர்களுக்கு சுரணை வந்துவிடாதா என்று வேகாத வெயிலில் போராடிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் அவர்களை சவுங்கிகளாக்கும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ் மாதிரியான அரை வேக்காடுகள்.

கொடுமை என்னவென்றால், இப்படத்தின் ஹீரோயின் யாஷினி பேசியதுதான். இதுபோன்ற படங்களை ரசிகர்கள் ஊக்கப்படுத்தினால், தமிழ்சினிமா அடுத்த லெவலுக்கு போகும் என்றார். நன்றாக தமிழ் பேசுகிற இவர், இந்தப்படத்தின் ரெட்டை அர்த்த வசனங்களை புரிந்து கொண்டுதான் நடித்தேன் என்று சொன்னது அதைவிட பேரதிர்ச்சி.

உடனடித் தேவை தமிழனுக்கு சூடும் சுரணையும். அதற்கு முன் காவேரி. அதற்கு முன்… சந்தோஷ் மாதிரியான ஆட்களை இஸ்டஸ்ட்ரியை விட்டே துரத்துவது. சீமானும் வேல்முருகனும்தான் மனசு வைக்கணும்!

முக்கிய குறிப்பு- ப்ளு சட்டை மாறன் சொன்னது போல படத்தை ஒரு வாரம் ஓட வைக்கிற அளவுக்கு பிரபலப்படுத்தாமல், ஊமை குத்தாக குத்துவதுதான் சரியாக இருக்கும். என்ன பண்ணப் போறீங்க அண்ணன்ஸ்?

1 Comment
  1. சீலன் says

    நாளைக்கு xxx படம் எடுத்துவிட்டு , எல்லா நாடிலேயும் மக்கள் விரும்பி விருப்பி பார்க்கிறாங்க,தமிழ்நாட்டில் தான் ஒளித்து,ஒளித்து பார்க்கிறாங்க, நாங்க opna (2019)கொண்டுவாறோம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவ்ளோ நல்லவரா அரவிந்த்சாமி?

https://www.youtube.com/watch?v=vagAAy261U4

Close