வடிவேலுவுக்கு சீமான் சப்போர்ட்! இனியாவது கரை தேறுவாரா?

வயிறார சிரிச்சு பல நாளாச்சு. சிரிப்பு நடிகன்ங்கிற பேர்ல இவிங்க பண்ற இம்சைக்கு சேர்ந்தாப்ல நாலு தூக்கு தண்டனை கூட கொடுத்துடலாம் போலிருக்கு என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். நல்லவேளை… யு ட்யூபும் தொலைக்காட்சிகளும் வடிவேலுவின் இருப்பை இந்த உலகத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

‘இப்ப கூட கெட்டுப்போகல ராசா. திருந்தி வந்திடு. திரும்பி வந்திடு’ என்று மண்சோறு சாப்பிடவும் தயாராக இருக்கும் ரசிகர்களுக்கு வடிவேலு ஒரு ஹெல்ப் செய்தால் போதும். அது? அடக்க ஒடுக்கமாக நாலு படத்தில் சேர்ந்தார்ப் போல நடிப்பதுதான்.

நடுவில் யார் செய்த அட்வைசோ… மனம் திருந்தியிருக்கிறாராம் வடிவுஸ்! ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் தண்ணி காட்டி வருகிறாரல்லவா? அந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் கூட இவருக்கு ரெட் போட்டதே நினைவிருக்கா? அதில்தான் புதிய முடிவெடுத்திருக்கிறார் வடிவேலு. இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கு சீமான் மூலம் தூது அனுப்பியிருக்கிறார். ‘நடந்தது நடந்திருச்சு. நல்லபடியா இந்த படத்தை முடிச்சு கொடுத்துடுறேன்’ என்று சீமானுக்கும் லைகாவுக்கும் ஒரு சேர வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.

பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவங்கியிருக்கிறது. துபாய் குறுக்கு சந்திலேர்ந்து எந்த எருமையும் குறுக்கே பூராம இருக்கணும். அது ரொம்ப முக்கியம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேனரை கிழிக்க அதிமுக வுக்கு அடுத்த படம் கிடைச்சாச்சு!

Close