பேனரை கிழிக்க அதிமுக வுக்கு அடுத்த படம் கிடைச்சாச்சு!

அதிமுக காரர்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கிறது. ‘அக்னிதேவ்’ என்ற படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சசிகலா, ஜெயலலிதா இவ்விருவரையும் ஒருவராக்கியது போல ஒரு பெண் பாத்திரம். நடிகை மதுபாலா நடித்திருக்கிறார்.

படத்தில் அவர் பேசும் வசனங்களும் காட்சி அமைப்புகளும் அதிமுகவினரை தூங்கவே விடாது போலிருக்கிறது. நிச்சயம் படம் வரும் நாளில் கொதித்து கொந்தளித்து போஸ்டரை கிழிக்கக் கூடும். பட் சோகம் என்னவெனில் இப்படத்தின் ஹீரோ பாபிசிம்ஹா.

செத்த பாம்பை அடிக்க சிரத்தை எடுப்பார்களா கட்சிக்காரர்கள்? பொறுத்திருந்துதான் கவனிக்க வேண்டும்.

1 Comment
  1. Ant hanan says

    ithuku yethuku sir vijayin padatha promotion panreenga…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஷாலை வளைத்து விட்டதா சன்?

Close