விஷாலை வளைத்து விட்டதா சன்?
சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படங்களை தயாரித்து வருவது நல்லதுதான். ஆனால் ரசிகர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் குஷி ஏற்படுத்தினாலும், ‘அப்பாவி… நாங்கதானே மாட்றோம்?’ என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள்.
‘சர்கார்’ படத்தை தீபாவளிக்கும், ‘பேட்ட’ படத்தை பொங்கலுக்கும் கொண்டு வந்த சன், ‘காஞ்சனா 3’ படத்தை தமிழ் புத்தாண்டுக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது. இப்படி பண்டிகை நாட்களையெல்லாம் ஒரே நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு எங்களை பட்டினி போடுகிறார் விஷால் என்று அவர் மீது கோபத்தை திருப்பியிருக்கிறார்கள்.
சன் டி.வி யின் கைக்குள் விஷால் போய்விட்டார் என்பதும் அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது.