இந்த ஒரு போஸ் போதும்… டிக்கெட் காசு சரியா போச்சு?
எவ்வளவுதான் பட்டி பார்த்து பப்ளிசிடிய ஏத்துனாலும், தொட்டிய விட்டு தாண்ட விடாது ரசிகர்கள் போடுகிற அபாயக் கோடு. அப்படியொரு இடியாப்ப சிக்கலில் இருந்த சக்தி வாசுவுக்கு டைம் வொர்க் ஆகிருச்சா, இல்லையா? இந்த கேள்விக்கான விடை தெரிய வேண்டிய நேரம் இப்போ மெல்ல மெல்ல வந்து கொண்டேயிருக்கிறது.
கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஒடுகின்றது. அதற்கு காரணம் சக்தி இல்லை. சிவராஜ்குமார்தான். அப்படியே இப்படத்தை தமிழிலும் கொண்டுவரப்போகிறார்கள். அங்கே எப்படி சிவராஜ்குமார் இப்படத்தை காப்பாற்றினாரோ? அதுபோல தமிழிலும் இந்த படத்தை காப்பாற்ற ஒரு ஹீரோ வேண்டும் அல்லவா? அந்த பொல்லாத பணியை தன் தோள் மேல் ஏற்றிக் கொண்டாராம் லாரன்ஸ்.
ஒரு சின்ன ஹீரோ, பெரிய ஹீரோவுடன் இணைந்து வரும்போது பெரிய ஹீரோவுக்காக கை தட்டுகிற கூட்டம், அப்படியே அந்த சின்ன ஹீரோவையும் மனதில் வைத்துக் கொள்ளும். இந்த பார்முலாவை இந்த படத்திலிருந்து பின்பற்றப் போகும் சக்தி வாசுவுக்கு இனிமேலாவது நல்ல இடம் கிடைக்குமா?
கிடைக்கும் ஆனா கிடைக்காது போலிருக்கிறது மேலே அவர் கொடுத்திருக்கும் போஸ்.
இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா எப்படி சார் தியேட்டருக்குள்ள ஜனங்க வருவாங்க? ப்ளீஸ்… மாத்துங்க மாத்துங்க!