நல்லா பண்ணிருக்க பூச்சி

 சூது கவ்வும், தேகிடி படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘  மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என  பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை செய்தோம். ‘காதல் கசாட்ட’ பாடலில் வரும் அழகான செட் அதை மிஞ்சும் வண்ணம் அமைந்த காஸ்டியும்ஸ் இவை இரண்டையும் அழகு குறையாமல் காட்டுவது பெரும் சவாலாக அமைந்தது. இதில் சாக்லேட் ஆடைகள், மிட்டாய் வீடுகள் என பல வேலைப்பாடுகள் இப்பாடலின் காட்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

“மேலும், “காளி பசங்க” பாடல், ஒரு சண்டைக்காட்சி பாடலாக வருகிறது இதை சண்டைகாட்சிக்கான விறுவிறுப்புடனும், பாடலுக்கான காட்சியமைப்புகளுடனும் ஷூட் செய்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.

“சென்னையின் பல பிசியான இடங்களிலும், சிலநேரம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஷூட் செய்துள்ளோம். வைபவ், சோனம் பாஜ்வா, அர்ஜுனன், கருணா என அனைவரும் மிகுந்த ஒத்துழைப்புடன் வேலை செய்தனர். மொத்தத்தில் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் உங்களுக்கு பிடிக்கும்”  

“ ‘எந்திரன்’ ஷூட்டிங்கில் நான் ரத்னவேல் சாரின் உதவியாளனாக பணி புரியும் போது அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருப்பேன். இதை பார்த்த ஷங்கர் சார் என்னை ‘பூச்சி’ என்றே அழைப்பார். கப்பல் படத்தை பார்த்து நல்லா பண்ணிருக்க பூச்சி” என்றார். ஒளி வீசும் மின்மினி பூச்சிதான்.

 ‘I’ ஸ்டுடியோஸ் புதிய தயாரிப்பு  நிறுவனம், இருப்பினும் நாங்கள் கேட்ட அனைத்தையும் குறித்த நேரத்தில் தந்து படத்தின் அவுட்-லுக் சிறப்பாக வர உறுதுணையாக இருந்தனர். ஷங்கர் சாரின் ‘S’ பிக்சர்ஸ் படத்தை ரிலீஸ் செய்கிறது. இதைக்காட்டிலும் ஒரு சந்தோசம் வேற என்ன இருக்கு நேகிழிச்சியுடன் கூறினார் தினேஷ் கிருஷ்ணன். 

Kappal , a colorful expedition says cinematographer Dinesh Krishnan

The man who mantled the camera for Soodhu Kavvum and Thegidi, Dinesh Krishnan has geared up to mesmerize the fans again with ‘Kappal’ with his camera. Kappal would be a  romantic movie you would love to see with friends on chilly holidays.

On sharing his experience with Kappal, He said “Kappal was a colorful expedition for me. Myself and Director Karthik  planned the whole visual agenda for scenes and song portions. We wanted it to be realistic and carry a lot of fantasy . We shot in many dense locations of Chennai candidly. The songs have came out really well.” He continued

Shooting for the track Kadhal Casatta was one of the challenging but delicious work in the film. The entire song was shot in the sets of Candy houses and dresses were made of Chocolate. We  have worked hard to get the songs a glossy outlook.

Director Shankar sir used to call me ”Poochi” from the days of Endhiran, while i was working as an assistant to Cinematographer Randy,Since I used to buzz around in the sets. After watching ‘Kappal’ Shankar sir lauded my work in the film. It was an unforgettable moment

The producers I studios and Director Karthik were so supportive.I would like to thank Shankar sir for releasing the film under his ‘S’ pictures. we have carried some out of the box concepts that will surely enthrall and  delight the audience” said Dinesh Krishnan, the man behind some eye catching visuals in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மருத்துவமனையில் கே.பி. – சீன் போடும் கூட்டம்?

ரஜினி கமல் என்ற இருபெரும் இமயங்களை இன்டஸ்ட்ரிக்கு வழங்கியவர் என்பதால் மட்டுமல்ல, காலத்தால் அழிக்க முடியாத படங்களை நமக்கு வழங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பதாலும் அவரை...

Close