சிம்புவும் அனிருத்தும் கடைய மூடிட்டாங்க!

எவன் செஞ்ச வேலைடா இது? என்று யாரும் கமென்ட் போட முடியாது. ஏனென்றால் அது அவிங்ய்களே செஞ்ச வேலைதான்! போர்பந்தரில் இருக்கும் எல்லா குளங்களிலும் சிம்புவை போட்டு முக்கியெடுத்தாலும், அவர் பரிசுத்த ஆவியாக வரவே முடியாது போலிருக்கிறது. டிசைன் அப்படி! அவரும் தன் மீதிருக்கும் பேட் இமேஜை தட்டி கழுவி சுத்தமாகதான் வைக்க நினைக்கிறார். அப்போதெல்லாம் ஒரு தானே புயலோ, ஒரு செம்பரபாக்கம் ஏரியோ புட்டுக் கொண்டு வந்து அவரை பதம் பார்த்து விடுகிறது. கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுக்க கழுவி கழுவி ஊற்றப்பட்ட மிக முக்கியமான இருவர் சிம்புவும் அனிருத்தும்தான்!

டம்மி வேட்ஸ் போட்டு பாடுவது ட்யூன் போடும்போது நடக்கிற சாதாரண விஷயம்தான். அந்த டம்மி வேர்டுகள் அவரவர் மன அழுக்குக்கேற்ப வெளியாவதை இசைக்கூடத்தில் நின்று கேட்பவர்கள் புரிந்து கொள்வார்கள். பாடல் முழுமை பெறும்போது அந்த டம்மி வார்த்தைகளை அழித்துவிட்டுதான் அடுத்த வேளை சோற்றிலேயே கையை வைப்பார்கள். சமயங்களில் அதில் வந்து விழும் வார்த்தைகளின் லட்சணம் அப்படியிருக்கும். சிம்புவும் அனிருத்தும் அப்படி போடப்பட்ட வார்த்தைகளைதான் அப்படியே வெளியே விட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது!

அது யு ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே நாடு தூற்றும் நல்ல ட்யூன் ஆனது. ‘என்னா பு….க்கு லவ்’ என்று தொடங்கும் அந்த பாடலில் சில இடங்களில் பீப் சவுண்ட் போட்டு சமாளித்திருந்தார்கள். விவகாரமான அந்த வார்த்தையை லேசாக அழிப்பது போல பீப் சவுண்ட் போடப்பட்டபோதே இது திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் என்பது தெளிவாகிறது.

திட்றவங்கள்லாம் வரிசையில் வாங்கப்பா என்கிற அளவுக்கு நாறிப்போனது பேஸ்புக்கும் ட்விட்டரும். சிலர் “சிம்பு அனிருத் மீது போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா?” என்கிற அளவுக்கு விவாதித்தார்கள். மனுஷ்யபுத்திரன் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே போய் “இது அரசியல் சதி” என்று கதையளந்தார். அதாவது, எல்லாரும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்ட ஜெயலலிதா அரசை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதை திசை திருப்பவே இவர்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அவரது பார்வை.

ஏற்கனவே அனிருத் இப்படியொரு ஆபாசமான பாடலை வெளியிட்டார் என்று அவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது. ஐயோ பாவம். அவரது அப்பா கமிஷனர் ஆபிசுக்கு போய் சமாளித்துவிட்டு வந்தார். இப்போது மீண்டும் அதே போலொரு தவறு. விளையாட்டு பிள்ளைகள் என்று விட்டுவிட்டு போக முடியாதளவுக்கு இதில் எல்லை மீறல் இருக்கிறது.

நாடெங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக அந்த நல்லவர்கள் இருவரும் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார்கள். தங்களை பற்றிய இப்படியொரு குற்றச்சாட்டு வைரலாக பரவி வருகிறதே… என்கிற லஜ்ஜை துளியும் இல்லாமல் போர்வையை மூடிக் கொண்டு படுத்துவிட்ட தம்பிகளை அப்படியே விட்டுவிடுவதா? அல்லது…?

யாராவது சொல்லுங்க ஞாயமாரே….!

Read previous post:
திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன்...

Close