சிம்புவோட ஹீரோயின் இப்போ விஜய் சேதுபதிக்கு ஓகே!
கே.வி.ஆனந்த்தின் கேமிரா கண்களில் அவ்வப்போது டஸ்ட் அலர்ஜி வந்து மொக்கை பீஸ்களை தேடும்! அப்படி அவர் தேடிய சில மொக்கை ஹீரோயின்களில் முதலிடத்திலிருப்பவர் அனேகன் ஹீரோயின் அமைரா! யாருய்யா இது? சோளக் கொல்லை பொம்மை ஆறு நாள் பட்டினியோட அலைந்த மாதிரியிருக்கே என்று பார்த்த மாத்திரத்தில் விமர்சித்தார்கள் அவரை. அவர் டேஸ்ட் மக்கள் டேஸ்ட்டோடு ஒத்துப் போகாமலிருந்தாலும் தனுஷின் நடிப்பும், ஹாரிசின் இசையும் படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி கரை சேர்த்தது.
அவரது முந்தைய தயாரிப்புகளில் ஒன்றான கார்த்திகா, ஒரு வித்தியாசமான அழகு!
தற்போது கே.வி.ஆனந்த் மக்கள் ரசனையோடு முழுமையாக ஒத்துப்போவார் என்றே தோன்றுகிறது. யெஸ்… அவரது அப்ரோச் மஞ்சிமா மோகனிடம் என்கிறார்கள். அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் மஞ்சிமா, நடிப்பு விஷயத்தில் ஏற்கனவே எக்ஸ்பர்ட். விஜய் சேதுபதியை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் புதுப்படத்திற்கு இவரைதான் ஹீரோயினாக்க முடிவெடுத்திருக்கிறாராம் கே.வி.
ஒரு முறை சிம்புவோடு நடிக்க வந்தால், அடுத்த ஆறு மாசத்திற்காவது அவரது கண்ட்ரோலில் இருக்கிற கட்டாயம் ஏற்படும் அவரது ஹீரோயின்களுக்கு. விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர சிம்பு அனுமதிப்பாரா? அல்லது சிம்புவையே மஞ்சிமா மதிப்பாரா என்பதெல்லாம் ஆயிரம் சந்தேகங்களை கிளப்பும் அல்டிமேட் கேள்விகள்.