படத்தை இன்னொரு முறை பார்க்கணும்! ரஜினியை வியந்த சிரஞ்சீவி!

ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவி மட்டுமல்ல, அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருக்கிற சூப்பர் ஸ்டார்களும் கூட கபாலியின் வெற்றி கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். அதுவும் ரஜினியின் கெட்டப்பும், அந்த கெட்டப்புக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் அவர்களை கலக்கோ கலக்கென கலக்கியிருப்பதால், இந்தியாவில் அமிதாப்பையும் தாண்டிய வசூல் சக்கரவர்த்தி என்ற இடத்தில் ரஜினியை கொண்டுபோய் வைத்துவிட்டார்கள்.

ரஜினி வாழும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, அநேகமாக இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் கூட, ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு சல்மான்கான், ஷாருக்கான்களை கூட மலைக்க வைத்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் சிரஞ்சீவி வாய்விட்டு கேட்டே விட்டார். என்னவென்று? படத்தை நான் இன்னொரு தடவை பார்க்கணும். ஏற்பாடு பண்ண முடியுமா என்று.

சிரஞ்சீவி முதன் முறை கேட்கும் போதே உடனடியாக அவருக்கு ஷோ ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதற்கப்புறம் இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் சிரஞ்சீவியிடமிருந்து ஒரு போன். “என்னவோ தெரியல… படம் என்னை டிஸ்ட்ரப் பண்ணிருச்சு. இன்னொரு தடவை பார்க்கணும்” என்றாராம். மீண்டும் அவரை படம் பார்க்க வைத்திருக்கிறார்கள். “மனதில் என்னென்னவோ தோணுது” என்றபடியே வெளியேறினாராம் சிரஞ்சீவி.

ஆமா… அப்படியென்னங்க தோணியிருக்கும்?

1 Comment
  1. பாரதிராஜா says

    KABALI – THE MASS & CLASS MOVIE.
    SUPER STAR RAJINI IS A COLLECTION KING OF INDIAN CINEMA
    ONE & ONLY BLOCKBUSTER MOVIE OF THE YEAR 2016 – K A B A L I

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடுக் திடுக்!

ரஜினி, விஜய், அஜீத் மாதிரி ஹீரோக்களாக இருந்தால், நாலு பிளாப்புகளை கூட அடுத்தடுத்து தாங்குவார்கள். ஐந்தாவதாக ஒரு படம் ரிலீஸ் ஆகிற நேரத்திலும் ரசிகர்கள் தலைவா.... என்று...

Close