இன்னமும் பாரா முகம் ஏனய்யா? சிவாஜிக்கு இழைக்கப்படும் தொடர் அநீதி!
சிவாஜியும் ஜெயலலிதாவும் ஏராளமான படங்களில் ஒன்றாக நடித்தவர்கள். ஆனாலும், சிவாஜி விஷயத்தில் ஜெ.வின் அணுகுமுறை அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தது இல்லை. (தலைவர் எவ்ளோ குடைச்சல் கொடுத்தாரோ அப்போது?)
எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியை ஜெயலலிதா திறந்து வைத்த போது கூட, மேடையில் கே.டி.குஞ்சுமோனுக்கு சீட் ஒதுக்கப்பட்டதே ஒழிய, நடிகர் திலகம் என்று உலகமே கொண்டாடுகிற சிவாஜிக்கு மேடையில் சீட் இல்லை.
சிவாஜி மறைவுக்கு பின் தன் உயிர் நண்பரான அவருக்கு சிலை வடித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அந்த சிலையைதான் அகற்றவேண்டும் என ஜெ. ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. எப்படியோ… சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு அவருக்கென உருவாக்கப்பட்ட மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வருகிற 1 ந் தேதி இந்த மணி மண்டப திறப்பு விழா. தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று ஊரே நினைத்திருந்தது. பட்… அம்மாவின் அரசாச்சே? அம்மா போலவே சிவாஜியை புறக்கணிக்க முடிவெடுத்துவிட்டார்கள் இருவரும்.
மண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைப்பார் என்று கூறிவிட்டது அரசு.
இந்த நிலையில்தான் தன் வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் பிரபு. முதல்வரும் துணை முதல்வரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது வருத்தத்தை அளிப்பதாக கூறியிருக்கிறார் அவர்.
ரஜினியும் கமலும், விஜய்யும் அஜீத்தும், சூர்யாவும் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் தனுஷும் வந்து சிறப்பித்தால்… அங்கு யார் வராவிட்டாலும், அது யார் கண்ணுக்கு தெரியப் போகிறது? முதலில் அதற்கு ஏற்பாடு செய்ங்க நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் அவர்களே….!
-ஆர்.எஸ்.அந்தணன்
Vishal hater ? Vara viruppam endra avanga varuvanga
Vishal Enna thookitta varathu