கவுதம்மேனன் மீது ஒரு கண்?
கவுதம்மேனன் மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அதை சம்பந்தப்பட்ட கவுதமிடம் கூறாமல், தன்னை நாடி வரும் பெரிய பெரிய தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம். அவர் காம்பினேஷன் கிடைத்தால் பாருங்களேன் என்று கூறுவதால், சிவாவை அப்ரோச் செய்த பல தயாரிப்பாளர்கள் அப்செட்!
கவுதமுக்கு என்று சில குணங்கள் உண்டு. முதல் குணம், தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்ல மாட்டார். அப்படியே சொன்னாலும் நாலு வரிக்கு மேல் சொல்ல மாட்டார். பணத்தை கேட்க கேட்க வாரியிறைக்க வேண்டும். இந்த சங்கடத்தையெல்லாம் தாண்டி வருகிற படம், சமயங்களில் ஆஃப் பாயில்களாக வெந்துவிட்டால், அவ்ளோதான் துட்டு. இதனாலேயே தயங்குகிறார்களாம்.
அவ்வப்போது சொந்தப்படம் என்று கணக்கு போட்டு வைத்திருக்கும் சிவகார்த்திகேயனும், கவுதம் மேனனை பொருத்தவரை வேறொருவர் பணம் போட்டால்தான் என்கிற முடிவில் இருக்கிறார்.
முட்டை ஓடும் உடையக் கூடாது. மஞ்சக்கருவும் வழியக் கூடாது என்றால் எப்படிதான் ஆம்லெட் போடுவதாம்?