எல்லா ஏரியாவும் இப்படிதான்! சிவகார்த்திகேயன் சாதனை!

முன்பெல்லாம் சிறு முதலீட்டு படங்களை கூட தைரியமாக வாங்கி வெளியிட்டு வந்த சினிமா விநியோகஸ்தர்களில் பலர், தலையில் துண்டு, போர்வை, ஜமக்காளம் போன்ற பலவித ஐட்டங்கள் விழுந்ததால் நொந்து, வெந்து வேறு வேலை பார்க்க கிளம்பிவிட்டார்கள். “சொந்த ரிலீஸ்தாங்க… வேற வழியில்ல” என்று சொல்கிற பல சிறு பட தயாரிப்பாளர்கள், கடைசியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது, ஒட்டிய போஸ்டர் காசு கூட திரும்ப வராமல் பேரதிர்ச்சிக்கு ஆளாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நேரும் ‘நோகுபலி’.

சரி… சின்ன நடிகர்களுக்குதான் இந்த பிரச்சனை. பெரிய நடிகர்கள் என்றால்? அங்கும் இந்த விநியோக முறை வந்து வில்லங்கம் பண்ணுகிறது. “ஒரு பெரிய அமவுன்ட் கொடுப்போம். கலெக்ஷன் வந்தா ஓ.கே. வரலேன்னா, வந்த கலெக்ஷன் போக மிச்சத்தை நீங்கதான் வட்டியோட கொடுக்கணும்” என்கிற முறையில்தான் பல பெரிய ஹீரோக்களின் படங்களையே வாங்கி வெளியிடுகிறது பணக்கார விநியோகஸ்தர்களின் பாதுகாப்பு மூளை.

இங்குதான் எம்.ஜி.என்றொரு முறை இருக்கிறது. அதாவது மினிமம் கியாரண்டி. ஒரு ஏரியாவின் விலை 50 லட்சம் என்று வைத்துக் கொள்வோமே? அந்த பணத்தை கொடுத்துவிட்டு படத்தை வாங்கிக் கொள்வார்கள். 50 லட்சம் கலெக்ஷன் ஆகிற வரைக்கும் அது விநியோகஸ்தருக்கு. அதற்கப்புறம் கலெக்ஷன் ஆகும் ஒவ்வொரு ரூபாயிலும் விநியோகஸ்தருக்கு பாதி. தயாரிப்பாளருக்கு பாதி. இந்த முறை அநேகமாக தமிழ்சினிமாவில் ஒழிந்தே போய்விட்டது. ஷ்யூர் ஹிட் என்று நம்பப்படுகிற படங்களுக்கு மட்டும்தான் இந்த முறையில் படம் வாங்குவார் விநியோகஸ்தர்.

சிவகார்த்திகேயனின் ரெமோ படம் இந்த முறையில்தான் விற்பனை ஆகி வருகிறதாம்.

அட… சரித்திரத்தை புரட்டுறாரே சிவகார்த்திகேயன்?

பின் குறிப்பு- ரெமோ படத்தின் பிரமோஷனுக்காக சிரிக்காதே என்ற வீடியோ பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இசை அனிருத். வீடியோவில் சிவகார்த்திகேயனும், அனிருத்துமே தோன்றி பாடவும் செய்திருக்கிறார்கள். ஆசை தீர பார்க்கணும்னா, வெயிட் பண்ணுங்க. 18 ந் தேதி சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!

விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும்...

Close