சோனா போச்சு! ரம்யா வந்திச்சு! ஹிஹிஹி…

பிளீச்சிங் பவுடர் போட்டு தேய்ச்சாலும், பிரேம்ஜி சிரிப்பை ரசிக்க முடியாது. அப்படியிருந்தும் அவரது சிரிப்பை ரசித்து, ஜோக்கில் குளித்து எவ்வித சேதாரமும் இல்லாமலிருக்கிறார் ரம்யா என்றால், அவர் வெறும் தொகுப்பாளினி மட்டுமல்ல, ஜீவகாருண்ய பேரொளி என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ‘அட, இருவரும் பார்ட்டி பிரண்ட்ஸ்… ஒரு செல்பி கூட இல்லேன்னா எப்படி?’ என்று மற்றவர்கள் சாதாரணமாக நினைத்தாலும், கடந்து போன இந்த விஷயத்தை, கட்டி இழுந்து வந்து களேபரம் பண்ணுகிறது கோடம்பாக்கம்.

சோனா போய் ரம்யா வந்திச்சு டும் டும் டும்… என்பதுதான் இந்த ஊர்வாய் சொல்லும் ஊறுகாய் நியூஸ்! ஒருகாலத்தில் நடிகை சோனாவின் செல்லமாக இருந்தவர் நம்ம பிரேம்ஜி.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஏக அமர்க்களமாக தாலி கட்டிக் கொண்ட தொகுப்பாளினி ரம்யா, வெளியில்தான் வளவள… வீட்டில் கப்சிப் என்று ஆகிவிட்டார் கணவருடன். அண்டர்ஸ்டேன்டிங் இல்லேன்னா இல்லறம் எப்படி இனிமையாய் இருக்கும்? பேசி வைத்து பிரிந்துவிட்டது ஜோடி. அதற்கப்புறம் தானுண்டு, தன் தொகுப்புரை உண்டு என்று இருந்த ரம்யா, நடுவில் குத்து சண்டை பயிற்சி பெற்று, முழுமையான குத்து பார்ட்டியாகவும் ஆகிவிட்டார். (நல்லவேளை… முன்னாள் கணவர் எஸ்கேப்)

எங்காவது மேடையில் எவர் முகத்திலாவது குத்துவிடுவார். இறுதி சுற்று ஹீரோயின் மாதிரி எல்லாராலும் கொண்டாடப்படுவார் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்தால், இப்படி பிரேம்ஜியுடன் போஸ் கொடுத்து பல யூகங்களுக்கு வழி வகுத்துவிட்டார் ரம்யா. வெறும் பிரண்ட்ஷிப் மட்டும்தானா? அல்லது அதையும் தாண்டியா?

சம்பந்தப்பட்ட இருவரும்தான் சிரிக்காமல் விளக்க வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடுத்தவங்களுக்கு தொந்திரவு? சிவகார்த்திகேயனின் புது பாலிஸி!

‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது. இத்தனைக்கும் ஏவிஎம் படம் தயாரிப்பதை நிறுத்தி பல வருஷங்கள்...

Close