சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது அப்பா சென்ட்டிமென்ட்!
இந்த ஒரு விஷயத்திற்காகவே கோடிக்கணக்கில் செலவாகிவிட்டதாம். ஆனாலும் சவுந்தர்யா ரஜினியின் ஒரு சின்ன முக வாட்டத்தை புரிந்து கொண்டு, கப்சிப் ஆகிவிட்டது கபாலி பட வட்டாரம். ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? அதுதான் வேதனை.
இந்த முறை கபாலி கொண்டாட்டங்கள் என்று தனியாக படம் பிடித்தால், அதையே ஒரு சினிமாவாக திரையிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு விஷயங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. சாட்டட் பிளைட்களில் அந்த பிளைட் கம்பெனி பெயரை மறைத்துவிட்டு கபாலி என்று பிரமாண்டமாக டைட்டில் போட்டு அதே விமானத்தில் ரஜினி படத்தையும் பொறித்து ரசிகர்களை அண்ணாந்து பார்த்து ஆனந்தப்பட வைக்க வேண்டும் என்கிற அளவுக்கு வேகத்தில் போய் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. அதற்கான பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் போய் கொண்டிருக்கிறது.
நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி 7 அடிஉயரத்தில் ரஜினியின் மெழுகு சிலைகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு தியேட்டருக்கும் அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தார். ஐம்பது சிலைகள் இறக்குமதியும் ஆகிவிட்டன. எல்லாமே சைனாவில் தயாரிக்கப்பட்டவையாம். ஆனால் சிலைகள் வந்த பின்புதான் ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. தாணுவை அழைத்தவர், சார்… சென்ட்டிமென்ட்டா நான் இதை விரும்பல. எனக்காக இந்த சிலைகளை வெளியில் எடுக்க வேண்டாமே என்றாராம்.
அவரே சொல்லிவிட்ட பிறகு அப்பீல் என்ன? சரிம்மா என்று கூறிவிட்டாராம் தாணுவும். ஆனால் ரஜினியின் மெழுகு பொம்மை அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்று ஏங்கிய ரசிகர்களுக்கு வேறு எதையாவது இதே போல பிரமாண்டம் காட்டி மிரள வைப்பார் தாணு என்பது மட்டும் நிச்சயம்.
[…] நமது இணைய தளத்தில் சில வாரங்களுக்கு முன்பே குறிப்பிட்ட விஷயம்தான். இப்போது கண்கூடாக அரங்கேறியிருக்கிறது. ஜுன் 14 ந் தேதியே ‘சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது அப்பா சென்ட்டிமென்ட்!’ என்ற தலைப்பில் நாம் எழுதிய செய்தியில் ரஜினி உருவத்துடன் ஸ்பெஷல் கபாலி பிளைட் வரப்போகிறது என்று கூறியிருந்தோம். இன்று காலையிலிருந்தே அந்த விமானத்தின் புகைப்படங்கள் இணைய உலகத்திலும், தமிழ் கூறும் நல்லுலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின் லிங்க் http://newtamilcinema.com/soundarya-not-like/ […]