அஜீத் விஜய் ரசிகர்களை நம்பி இறங்குனா இப்படிதானா? அதிர்ச்சிக்கு ஆளான இயக்குனர்

திரையில் ரஜினி, அஜீத், விஜய் மூன்று பேரையும் காட்டினால், கூட்டம் கைதட்டும். விசிலடிக்கும். இதை நம்பி எல்லா படங்களிலும் ஒரு காட்சிகளிலாவது இவர்களை காட்டிவிடுகிற வழக்கம் பெருகி வருகிறது. வாழை இலை சும்மா கிடக்கேன்னு விருந்தாளியா கூப்பிட்ட கதையா, இவர்களையே கதைக்களமாக வைத்து படம் எடுத்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்ததன் விளைவு?

ஹைய்யோ… அதையேன்பா கேட்கறீங்க?

சில மாதங்களுக்கு முன் 12.12.1950 என்றொரு படத்தை இயக்கியிருந்தார் நடிகர் செல்வா. இந்த நம்பர் என்னவென்று தெரிகிறதா? ரஜினியின் பிறந்தநாள். முழுக்க முழுக்க ரஜினி ரசிகராகவே நடித்திருந்தார் செல்வா. அதுமட்டுமல்ல… படத்தில் கபாலி கெட்டப் இவருக்கு. கபாலியே சரியா போகல. இந்த கொடுமையில டூப்ளிகேட்டுக்கு என்ன மரியாதை இருக்கும்? படம் பண்டல்.

இந்த சூட்டை அறியாத டைரக்டர் வெற்றி மகாலிங்கம், விஜய் அஜீத் ரசிகர்களுக்கு இடையேயான மோதலையே ‘விசிறி’ என்ற பெயரில் ஒரு படமாக எடுத்திருந்தார். யானைக்கும் யானை பொம்மைக்குமான வித்தியாசம்தான் இந்த படம் அவருக்கு கொடுத்த அனுபவம். ஒழுங்கான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தப்பி தவறி கிடைத்த தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜீத் விஜய் ரசிகர்களும் ஆப்சென்ட்.

தங்களை பற்றியோ, தங்கள் ரசிகர்களை பற்றியோ ஒரு படம் திரைக்கு வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பாமல் ஆஃப் ஆகியிருந்தார்கள் அஜீத்தும் விஜய்யும்.

நிஜம் இப்படிதான் இருக்கிறது. இவங்களையெல்லாம் நம்புறதுக்கு, எச்.ராஜா பற்றியும் அவரது ஏடாகூட பேச்சுகள் பற்றியம் ஒரு படம் எடுத்தால் கூட பிய்ச்சுகிட்டு ஓடியிருக்கும் போல!

1 Comment
 1. விஜயகாந்த் says

  Dear Anthanan,
  KABALI MOVIE – FIRST ‘3’ DAYS COLLECTION REPORT:

  ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் மூன்றே நாட்களில் உலகெங்கும் ரூ 268 கோடிகளை முதல் மூன்று நாட்களில் வசூலித்துள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.இதுவரை எந்த இந்தியப் படமும் வசூலிக்காத அளவுக்கு தமிழகம், இந்தியா மற்றும் உலக நாடுகளில் ரூ 268 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழகத்தில் முதல் மூன்று நாட்களில் ரூ 63 கோடிகளை கபாலி குவித்துள்ளது.கேரளாவில் ரூ 17 கோடிகளும், ஆந்திராவில் சாதனை வசூலாக ரூ 36 கோடிகளும் வசூலாகியுள்ளது. இந்தி பேசும் வட மாநிலங்களில் கபாலியின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகள் இதுவரை மொத்தம் ரூ 35 கோடிகளுக்கு மேல் குவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
  வெளிநாடுகளில் வேறு எந்த இந்தியப் படமும் கற்பனை செய்ய முடியாத வசூல் கபாலிக்குக் கிடைத்துள்ளது. மொத்தம் ரூ 140 கோடிக்கு மேல் வெளிநாட்டு வசூல் உள்ளது.
  முதல் மூன்று நாட்களில் மட்டும் கபாலியின் மொத்த வசூல் ரூ 268 கோடி என தெரியவந்துள்ளது.
  இந்த வாரமும் இதே வசூல் தொடர்ந்தால் எளிதாக ரூ 400 கோடிக்கும் மேல் கபாலி வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அட்லீ ரஜினி சந்திப்பு! அடுத்தப்பட பிளான்?

Close