கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு இயக்குனர்கள் பதற்றம்?

கடந்த 24 நேரத்திற்கும் மேலாக மையம் கொண்டிருந்த புயல் ஒருவழியாக இன்று கரையை கடந்துவிட்டது. இறைவி படத்தில் திரைப்பட தயாரிப்பாளர் என்ற இனத்தையே கேவலப்படுத்துவது போல டயலாக் மற்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதலில் குரல் எழுப்பிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் எண்ணத்தை பேஸ்புக் மூலம் வெளிப்படுத்தியும், தயாரிப்பாளர் சங்க தலைமையின் காதுக்கு கொண்டு சென்றும் இருந்தார். அதற்கப்புறம் மளமளவென பற்றிய தீ, நேற்று மிக வேகமாக சுழன்று அடித்தது.

அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று ஒரு குழுவும், வேண்டாம் என இன்னொரு குழுவும் வாதிட்டுக் கொள்ள, இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டப்படுவதாக அறிவித்தார் சங்கத்தின் தலைவர் தாணு. இன்று மாலை சுட சுட வைக்கப்பட்ட விவாதங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கு இனி யாரும் தொழில் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் சிலரும், இயக்குனர்கள் சங்கமும் சங்கத்தின் முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் அவற்றை நிராகரித்த சங்கம், இயக்குனர் சங்கத்திடம் விவாதிக்க தேவையில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறதாம்.

ஒருபுறம் இப்படி விவாதிக்கப்பட்டாலும் அதிகாரபூர்வமாக இதை அறிக்கையாகவோ, செய்தியாகவோ வெளியிட முடியாது என்பதாலும் அப்படி அறிவித்தால் அது சட்டபூர்வமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதாலும் அமுக்கி வாசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாலா அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!? எதிரிகளின் சூழ்ச்சியா?

சட்டி உடைசல், சாம்பாரில் உப்பு என்பது போலவே சமீபகாலமாக படம் எடுத்து வரும் பாலாவுக்கு, இதுவல்லவோ விருந்து என்று கண்ணை மூடி ரசிக்கும் பெரும் கூட்டம் இருப்பதுதான்...

Close