அம்மா மறைவால் சோகம்! ஆறுதலுக்கு பிரேம்ஜி ஆர்.ஜே.பாலாஜி!
டிசம்பர் வந்தால், மியூசிக் அகடமிகளின் கச்சேரிகள் மறைகிற அளவுக்கு கடந்த சில டிசம்பர்களாக தமிழகத்தில் மட்டும் படு பயங்கர அதிர்ச்சிகள்.
சுனாமி, சென்னையை மூழ்கடித்த வெள்ளம், ரூபாய் நோட்டு குளறுபடி, அம்மா ஜெ.வின் மறைவு, என்று பல்வேறு அழுத்தங்கள் மண்டையை தாக்குகிற அளவுக்கு சிக்கலுக்குள்ளாகிவிட்டது தமிழ்நாடு. ஜனங்களின் அவசரத் தேவை ஒரு ‘பட்கெட்’ சிரிப்பு! இப்படியொரு மனநிலைக்கு ஆளாகியிருக்கும் இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் போவது யார்?
திருவாளர்கள் பிரேம்ஜி, மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர்தான்.
வருகிற 9 ந்தேதி திரைக்கு வரவிருக்கிறது ‘சென்னை 28 பார்ட் 2’ மற்றும் ‘பறந்து செல்ல வா’ ஆகிய இரண்டு படங்கள். இரண்டிலும் காமெடி உச்சபட்ச உறுமி மேளம் என்கிறார்கள் திரையுலக மீடியேட்டர்கள். சென்னை 28 இரண்டில் சிங்கிள் ஆளாக வந்து கிச்சு கிச்சு மூட்ட ட்ரை பண்ணுகிறார் பிரேம்ஜி. ‘பறந்து செல்ல வா’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், மற்றும் கருணாகரன் ஆகிற மூவரின் பர்பாமென்ஸ் இருக்கிறது.
இவ்விரு டைரக்டர்களையும் லைனில் பிடித்தோம்.
“தமிழகம் இப்போ ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருக்கு. மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியே தீரணும். ஒரு அற்புதமான தலைவரை இழந்திட்டு தவிக்கிற ஜனங்களுக்கு ஆறுதலா எங்க படம் இருக்கும்” என்கிறார்கள் சொல்லி வைத்த மாதிரி!
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு சிரிக்கத் தெரியாதான்னு யாரும் கேட்டுவிடக் கூடாதில்லையா? ஒரு தடவ தியேட்டருக்கு வந்து கவலையை கழற்றி போட்டுட்டு போங்க மக்களே…!
https://youtu.be/SUzfpl1l3Y0