ஆன்லைன் திருடன் அகப்பட்டான்! விஷால் உள்ளிட்ட திரையுலகத்தினர் குஷி!
விஷாலின் தேர்தல் வாக்குறுதிகளில் மாஸ்டர் பீஸ், தமிழ்ராக்கர்ஸ்சை பிடிப்பதுதான். விஷாலுக்கு மேடை கிடைக்கும்போதெல்லாம் “தமிழ்ராக்கர்சை நெருங்கிட்டோம். சீக்கிரம் அந்த நல்ல செய்தியை சொல்றேன்” என்று கூறி வருவதும் வாடிக்கையாக இருந்தது.
துப்பறிவாளன் பிரஸ்மீட்டுக்காக ஜுலை மாதம் பேசிய விஷால், “ஆகஸ்ட் 4 ந் தேதி உங்களுக்கு அந்த நல்ல செய்தியை சொல்றேன்” என்ற தேதியோடு அறிவித்தார். ஆனால் ஆடி போய் ஆவணி வந்தாலும், ரிசல்ட் முட்டைதான் என்ற கேலி வார்த்தைகளே அவருக்கு பரிசாக கிடைத்தது. இந்த நிலையில்தான் அந்த திடீர் திருப்பம்.
எலிக்கு வைத்த வடையில் மூஞ்சூறு அகப்பட்டதைப் போல, இன்று ‘தமிழ் கன்’ என்ற வலைதள திருடன் சிக்கினான். விஷால் தரப்பு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே அவன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் உலவுகின்றன. முதலில் பிடிபட்டது ‘தமிழ்ராக்கர்ஸ்’தான் என்று செய்திகள் பரவின. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் “ஒழிஞ்சாண்டா துரோகி” என்று சந்தோஷப்படுகிற நேரத்தில், இது அவனில்லை. வேற… வேற… என்று கூறப்பட்டதால் உற்சாகம் சொய்ங் என்று வடிந்தே விட்டது.
இருந்தாலும், பிடிபட்டிருக்கும் கவுரி சங்கர் என்கிற இந்த ‘தமிழ் கன்’ ஆசாமியும் கொள்ளைக்கார கூட்டத்தின் முக்கிய நபர் என்பதால் விஷால் டீம் ஹேப்பி அண்ணாச்சி.
பின்குறிப்பு- இந்த தகவல் வந்த சில மணித்துளிகளிலேயே தமிழ்ராக்கர்சுஸ் -ன் அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜ்ஜில், ‘இது தவறான தகவல்’ என்று மறுப்பு வந்ததுதான் மறுபடியும் ஒரு பலத்த ஐயோ. ஐயய்யோ!
https://youtu.be/BB6MFRlsYPg