அஜீத் கலந்து கொள்ளாத ஆபிஸ் பூஜை! DHADA PUDAL THALA 57
இன்று கொழுத்த முகூர்த்த நாள். சும்மாவே ஆயிரம் சென்ட்டிமென்ட் பார்க்கும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவா வேண்டும்? கோடம்பாக்கத்தில் திரும்பிய இடமெல்லாம் தீபாராதனை! நடிகர் விக்ரம் பிரபு சொந்தப்பட நிறுவனம் ஒன்றை இன்று படு விமரிசையாக தொடங்கினார். ஏற்கனவேதான் சிவாஜி புரடக்ஷ்ன் இருக்கு. அப்புறம் இன்னாத்துக்காம்? என்று சிலர் மோவாயை திருப்பினாலும், அவரோட திட்டமே வேற என்ற கிசுகிசுப்பும் கேட்கிறது. பெரிதாக ஒன்றுமில்லை… அவரது மார்க்கெட் வேல்யூ என்பது அவருக்கே தெரியவில்லையாம். அவர் ஒரு குறிப்பிட்ட சம்பளத்தை தயங்கி தயங்கி கேட்டாலும், தந்துட்டாப் போச்சு என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
எவ்வளவு அதிகம் கேட்டாலும், இந்த பதிலை சொன்னால்? அங்குதான் பொறி தட்டியிருக்கிறது நடிப்பு மவராசனின் பேரனுக்கு! நம்மளே பத்து பைசா விடாம கணக்கு பார்த்து காசு போட்டு நல்லா விளைஞ்சதும் பணத்தை அலக்கு வச்சு பறிக்கணும். அந்த நேரத்தில் தெரியும்ல ஒரிஜனல் நிலவரம்?
சரி போகட்டும்… அஜீத் மேட்டருக்கு வருவோம். அஜீத் அட்வான்ஸ் வாங்கி பல மாதங்கள் ஆகியும், “டயருக்கு எப்பய்யா காத்தடிப்பீங்க?” என்று கேட்காத குறையாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். போன வாரம் போன மாசம் ஆகி, போன மாசம் போன வருஷம் ஆவதற்குள் பூஜையை போட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்ததாம் சத்யஜோதி பிலிம்ஸ். நல்ல நாள், நல்ல நட்சத்திரம் எல்லாம் பார்த்து இன்று குத்துவிளக்கேற்றி ஆபிஸ் பூஜை போடப்பட்டது.
போன படத்திற்கு ஆபிஸ் பூஜைக்கு மட்டும் வந்த அஜீத், அதற்கப்புறம் படம் தொடர்பான எதற்கும் வரவில்லை. இந்த முறை இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். ஆபிஸ் பூஜைக்கே வரவில்லை! விடையை முதலில் எழுதிவிட்டு, கணக்கு வழக்குகளை கடைசியில் போட்டுக் கொள்ளும் வித்தியாசமான கணக்கு வாத்தியார் அஜீத்திற்கு, உலகம் நிறைந்த ரசிகர்கள் சார்பில் பலமாக ஒரு ஓஹ்ஹ்ஹ்ஹோப்பா!
Ivanuku yethuda fans… Amount credited ah jalra adika
appa yenna ajith punduga poitaaraa? illa poojaiku pona naan madaiyanaa?