தெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர் கைது! பின்னணியில் பிரபலம்?

தமிழ்சினிமாவை கரையான் போல அரித்து வருவதே திருட்டு விசிடிதான். இதை ஒழித்துக் கட்டியே தீருவது என்று ஒவ்வொரு முறை குரல் கொடுக்கிறது திரையுலகம்! ஆனால் இதே திரையுலகத்தை சார்ந்த சிலர், சந்துக்கு பின்னால் தவறுக்கு துணை போகிற கொடுமையையும் செய்து வருகிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் இன்று காலையில் நடந்திருக்கும் இந்த சம்பவம். கோவையிலிருக்கும் ஒரு பிரபல தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரை சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அவரது விலை உயர்ந்த கேமிராவை பிடுங்கி ஆராய்ந்தால் அரை மணி நேர படம் அதில் பதிவாகியிருப்பதும், மீதமுள்ள படத்தையும் அவர் படமாக்க முயன்றதும் தெரிய வந்தததாம். இது கூட பரபரப்பு இல்லை.

மேற்படி இளைஞர் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் கேமிராமேன் என்பதுதான் பரபரப்பு. இந்த தகவல் விசாரணையில் தெரியவர உடனடியாக காவல் துறைக்கு தகவல் அனுப்பிய விஜய் ரசிகர்கள் அவரை கைது செய்யவும் வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து உலவும் அதிகாரபூர்வமற்ற தகவல் இதுதான். இந்த திரையரங்கத்துக்கு சொந்தமான சினிமா பிரபலம், கடந்த சில தினங்களாகவே தெறி படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாராம். “அவரே ஏன் இப்படியொரு ஏற்பாட்டை செய்திருக்கக் கூடாது?” என்பதுதான் பலரது சந்தேகமாக இருக்கிறது.

உண்ட வீட்டையே ஊனப்படுத்துகிறீர்களே? இதுவா பெரிய மனுஷனுக்கு அழகு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இளம் இசையமைப்பாளரை ஆசிர்வதித்த இளையராஜா!

இசைத்தமிழின் பிறப்பிடமான மதுரை மண்ணில் இருந்து உருவெடுத்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தனது சிறுவயதிலிருந்தே தேவாலயங்களில் கீபோர்ட் மற்றும் கிட்டார் வாசித்து வந்த ஜஸ்டின், மதுரை...

Close