தூங்காவனம் விமர்சனம்

போலீசுக்கும் போதைக்கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி சமாச்சாரம்தான் கதை! போலீஸ் என்றால் இது காக்கி போலீஸ் இல்லை! கருப்புக்கோட் போலீஸ். பொதுவாகவே ‘நார்த் இண்டியா மூஞ்சு நமக்கெல்லாம் ஒட்டாது’ என்பது போல, இந்த கோட் சூட் சமாச்சாரங்களே நமக்குள் ஒரு வித அந்நியத்தை ஏற்படுத்திவிடுகிறது. “நார்காடிக்ஸ் அதிகாரிங்களாம்ப்பா… அவங்கள்லாம் இப்படிதான் இருப்பாங்க போல” என்று மனசுக்கு ரெயின் கோட்டை மாட்டிவிட்டு கதைக்குள் நுழைந்து கொண்டால், அதற்கப்புறம் நடக்கிற சம்பவங்களில் ஆங்காங்கே விறுவிறு. ஆங்காங்கே அப்பளம் நமத்துப் போச்!

கமலுக்கு ஒரு பெண்டாட்டி. நல்லவேளை… முத்தம் கொடுக்க முடியாத தொலைவில் இருந்து கொண்டு அவ்வப்போது போன் பண்ணி அதட்டுகிறார். வேறொன்றுமில்லை. அவருக்கும் இவருக்கும் டைவர்ஸ். இவர்களின் ஒரே மகன் கமல் வீட்டில் கொஞ்ச நாளும். மனைவி ஆஷா சரத் வீட்டில் கொஞ்ச நாளும் இருப்பான் போல. ஸ்கூலுக்கு அவனை கொண்டு போய் விடுகிற கமல், அன்று அதிகாலையிலேயே ஒரு வேலை செய்கிறார். போதைப் பொருளான கொக்கைன் கடத்தும் ஆசாமி ஒருவனை சுட்டுக் கொன்றுவிட்டு, கொக்கைனை தன் கஸ்டடியில் வைத்துக் கொள்கிறார்.

அன்றைய தினமே ஸ்கூலுக்கு போன மகனை கொக்கைன் பறிகொடுத்த கும்பல் கடத்திவிட, பொருளை திருப்பிக்கொடுத்துவிட்டு மகனை மீட்க கிளம்புகிறார் கமல். மீட்டாரா? போன இடத்தில் என்ன நடந்தது? ஒரு ராத்திரியில் நடக்கும் கதை. சம்பவம் நடக்கும் லொக்கேஷன் எலிப்பொந்தும் ஏகாதேசி இரவுமாக இருக்க, “சின்னப்படந்தான். இருந்தாலும் சீக்கிரம் முடிங்கப்பா…” ஆகிறார்கள் ரசிகர்கள். ஆங்காங்கே குழந்தைப்பாசம். அப்பாவை மகன் புரிந்து கொள்வது. போலீசுக்குள் நடக்கும் அரசியல் என்று நிறைய சமாச்சாரங்களை தொட்டிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா.

ஒரு பப் எப்படியிருக்கும் என்பதை இளசுகளின் அணைப்பும், இரவின் கூச்சலுமாக தத்ரூபமாக காட்டியிருக்கிற அவர், அவ்வளவு குடி கூத்துகளுக்கு நடுவில் ஒரு அப்பனின் தவிப்பையும் அழகாக காட்டியிருக்கிறார்.

கமல் என்ற காட்டு சிங்கத்திற்கு, பால் பவுடரை கரைத்துக் கொடுத்ததை போல சற்றே மொக்கையான ரோல்தான்! யதார்த்தம் அதுதான் என்பதால் அதற்குள் நுழைந்து கொள்கிறார் அவரும். ஒரு போலீஸ்காரனின் நரிப்புத்தி எப்படி வேலை செய்யும் என்பதற்கான உதாரணமாக ஒரு பொட்டலத்தை மட்டும் வில்லன் பிரகாஷ்ராஜிடம் காட்டிவிட்டு, “பையனை காட்டு. மீதியை கொண்டு வந்து தர்றேன்” என்பது நெத்தியடிதான். அதுவே பிற்பாடு அவருக்கு சுத்தியடியாக முடிவது பாவமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் மகனை மீட்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி அழும்போது, நமக்கும் நெஞ்சடைத்துக் கொள்கிறது.

படத்தில் கமல் அடி வாங்க வேண்டுமே? காலையிலேயே அவர் வயிற்றை கிழித்துவிடுகிறது கதை. அதற்கப்புறம் அந்த பப்பில் அவரை நைய புடைக்கிறார்கள் வந்து போகிறவர்களெல்லாம். அவரும் பல இடங்களில் முரட்டு அடி அடித்து, முரட்டு அடிவாங்கி கலவையான மனநிலைக்கு தள்ளுகிறார் தன் ரசிகனை. கமல் என்றால் உதட்டு அல்வா இல்லாமலா? செம கிஸ் ஒன்றும் இருக்கிறது. தப்பித்து ஓடுகிற போது ஒளிவதற்கு ஒரு பீரோவோ, பெட்ஷீட்டோதானே அகப்படும் மற்றவர்களுக்கு? ஆனால் கமல் ஒரு பெண்ணின் உதட்டை தேடியிருக்கிறார். இடி இடிச்சாலும் மழை பொழிஞ்சாலும் காரியத்துலே உதடு?

த்ரிஷாவுக்கு செம ரோல். பெண் மனசாச்சே? கமலுடன் அவ்வளவு ஆக்ரோஷமாக மோதிய பின் அவரது நிலைமையை நினைத்துப் பார்த்து கொக்கைன் இருக்கும் இடத்தை சொல்லும்போது, ‘காப்பாத்திட்டீயே தாயி’ ஆகிறார். (வயசு ஏற ஏற எங்கேர்ந்தும்மா புடிக்கிறீங்க ஒங்க எளமையை?)

நாலே நாலு சீன் வந்தாலும், நான் நான்தாண்டா என்கிறார் பிரகாஷ்ராஜ். அவரது நக்கல் சிரிப்பும், நரிப்பார்வையும் பிரம்ம்ம்மாதம்! கிஷோரின் ஹைட்டுக்கும், வழுக்கை மண்டைக்கும், கூரான பார்வைக்கும் பொருத்தமான ரோல்தான். ஆனால் அவ்வளவு அதிகாரமுள்ள போலீஸ் அதிகாரிகள், அந்த பப்பை சற்று நேரம் குளோஸ் பண்ணி, அதிரடியாக சர்ச் பண்ணியிருக்கலாமே ?

எல்லாரும் எல்லா வகையிலும் நடித்துக் கொண்டிருக்க, கமல் மகனாக நடித்திருக்கும் அந்த சிறுவனின் நடிப்பு மிக இயல்பானது. அலாதியானது. தன் அப்பா மீது கொஞ்சம் கொஞ்சமாக அன்பு கொள்ளும் அவன், அவரை தாக்கிய ஒருவனின் மீது கையிலிருக்கிற ஒரு பொருளை வீசிவிட்டு, “அப்பாடா…” என்று பெருமை கொள்கிற போது ‘அப்பாடா’ என்றாகிறது மனசு.

ஜெகன் என்ற அருவறுப்புக்கும் நல்ல ரோல் கொடுத்திருக்கிறார்கள். நல்லவேளை… தம்பி. அதிகம் பேசி எரிச்சல் தரவில்லை. (நல்லாயிருப்பப்பா…)

இசை ஜிப்ரான். பின்னணி இசைக்குதான் அதிக வேலை. உணர்ந்து செய்திருக்கிறார். சானு ஜான் வர்கீசின் கேமிராவும் லைட்டிங்கும் லைவ்!

அதுவரை கம்பீரமாக வந்த போலீஸ் அதிகாரிகள் எல்லாம் படம் முடிந்தபின் இடுப்பை நெளித்து டான்ஸ் ஆடுகிறார்கள். அந்த பாடல் கருமம்…படத்தில் இல்லாவிட்டால்தான் என்னவாம்?

தூங்காவனம், பலரும் எதிர்பார்த்த மாதிரி ‘தொங்கா’வனமாக அமையவில்லை. தப்பித்தோம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

9 Comments
 1. தமிழ் நேசன் says

  படம் படு போராக உள்ளது. மெதுவாக நகர்கிறது. மரண மொக்கை.

 2. priyadharsun says

  நேர்மையா விர்சனம் எழுத மனசு விடலைன்ன கடைய சாத்திட்டு போய்டே இருக்கனும். வேதாளம் படத்துக்கு உங்க வலைத்தலத்தில விளம்பரம் குடுத்திருக்காங்க. அதனால சுமார் படமா இருந்தாலும் சூப்பர்னு எழுதினீங்க. தூங்காவனத்துக்கு உங்க வலைத்தலத்தில விளம்பரம் தரல. அதனால நல்ல தரமான படமா இருந்தாலும் சுமார்னு எழுதுறீங்க. தமிழ்சினிமா வலைத்தலத்தில விமர்சனம் எழுதிட்டு இருந்த போது இருந்த நேர்மை இப்போ சொந்தமா வலைத்தளம் நடத்தும் போது உங்க கிட்ட இல்ல. எவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ் சினிமாக்கு நல்ல படம் எடுத்து குடுத்திருக்காங்க. அத விமர்சனம் என்கிற பேர்ல உங்க சுயலாபத்துக்காக எதுக்காக கொச்சைப்படுதுறீங்க? இதுக்கும் மேல நீங்க நேர்மையா தான் எழுதினீங்க என்று நினைத்தால் உங்களுக்கு இந்த மாதிரி திரைபடத்தை ரசிக்கும் அளவுக்கு ரசனை இல்லை என்று பொருள்.

 3. kk says

  As usual kamal takes all the credit for a scene by scene copy of the french movie.As

  1. priyadharsun says

   Some of the previous movies of Kamal are copy like Avvai Shanmugi. This is not a copy bro this is a official remake. Credits given in the title card of the movie. Officialy they buy the rights and remake the film in tamil. Padatha parthitu comment pannuga bro. Masala padamnga perla sonna kathaiyaiye thirumba thirumba color mathi kattama, differentana movie tamiluku introduce panrathu nalla visayaum thane.

   1. kk says

    Iam not sure whether you saw the interviews given by the director or kamal on this movie.They were talking as if they thought the whole movie by themselves.what is the point in remaking a movie frame by frame.There is absolutely no creativity in it.Cops wearing blazers in chennai? that too trisha?.Truth of the fact is kamal and the director did not use the brain as much as what masala movie color changers did.

 4. SACHIN says

  Flop Movie

  1. Ally says

   That’s an inventive answer to an inrisetteng question

 5. babu sami says

  ninka ella thiruntha’va matinka taa onkalunku nooru parai aticha than putikkum ada kadavula intha tamilanai kapatha yarum illaya

 6. Sathyaraj says

  தூங்காவனத்தின் நிலை வெந்த புண்ணில் உப்புக் காகிதம் வைத்து தேய்ப்பதற்கு சமம். இதுவரை ரூ 20 கோடியைத் தாண்டவில்லை அந்தப் படம். அமெரிக்காவில் மட்டும் ரூ 3 கோடியை வசூலித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி ஆசைப்பட்டார்! இப்போ அஜீத் ஆசைப்படுகிறார்?

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என்று பாடிய புலவன்தான், இப்போது மறுபிறவி எடுத்து ரீமேக் படங்களாக எடுத்துத்தள்ளிக் கொண்டிருக்கின்றானோ என்னவோ? யெஸ்... ஜெயம் ரவி,...

Close