ரஜினி ஆசைப்பட்டார்! இப்போ அஜீத் ஆசைப்படுகிறார்?

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்…’ என்று பாடிய புலவன்தான், இப்போது மறுபிறவி எடுத்து ரீமேக் படங்களாக எடுத்துத்தள்ளிக் கொண்டிருக்கின்றானோ என்னவோ? யெஸ்… ஜெயம் ரவி, ஜெயம் ராஜா, விஜய், மகேஷ்பாபு, நாகார்ஜுனா, சிரஞ்சீவியெல்லாம் இருக்கும் வரை, ரீமேக் படங்களுக்கான மவுசு ஒருபோதும் குறையாது போலிருக்கிறது.

அதிலென்ன தப்பு? காப்பியடித்து கல்லா கட்டுவதுதான் தப்பு. முறையாக ரீமேக் ரைட்ஸ் வாங்கி படம் எடுக்கிறவர்களை கோவில் கட்டி கும்பிட்டால் கூட தப்பில்லை. அண்டை மாநிலங்களில் வெற்றி பெறுகிற படங்களை குறி வைத்து அள்ளிக் கொண்டிருக்கும் விஜய் போல, ரஜினிக்கும் ஆசை காட்டியிருந்தார்கள். அந்த படம்தான் பாஸ்கர் தி ராஸ்கல். ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடிக்கிற துணிச்சல் உள்ள எந்த ஹீரோவும் நடிக்க ஆசைப்படுகிற படம் இது. அதில்தான் நடிக்க நிறைய ஆசைப்பட்டார் ரஜினி. மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய சித்திக், அதன் தமிழ் உரிமையையும் தானே வைத்திருக்கிறார். வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்தால், அதை முடிந்தவரை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிடுவார்கள் என்று நினைப்பதால், மேற்படி படத்தை நானே தமிழிலும் இயக்குவேன் என்று மல்லுக்கட்டுகிறாராம்.

சில மாதங்களுக்கு முன் ரஜினியை அவர் அணுகியதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் அந்த படத்தினால் ஏற்பட்ட சிறுசிறு பிரச்சனையால் மனம் நொந்த ரஜினி, கபாலி, எந்திரன்2 என்று பார்வையை வேறு திசையில் திருப்பிவிட்டார். இப்போது அதே கதையில் நடிக்க பிரியமாக இருக்கிறாராம் அஜீத். சித்திக்கும் அஜீத்தை சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன.

நடுவில் வேதாளம் கலெக்ஷன் விஷயத்தில் ஏராளமாக மயக்கியதால், “ஜனவரியிலேர்ந்து ஷுட்டிங் போலாமா சிவா?” என்று கேட்டிருக்கிறாராம் அஜீத்.

சித்திக்கா? சிவாவா? தாயக்கட்டையை உருட்டிக் கொண்டிருக்கிறது பைனான்சியர்கள் மனசு!

பின்குறிப்பு- ஆனால் ‘இந்த செய்தி எதுவும் உண்மை இல்லை’ என்று மறுத்திருக்கிறார் சித்திக்!

1 Comment
  1. அறிவழகன் says

    அடிச்சு விடுங்க. அப்புறம் இவங்களே 10 நாள் கழித்து படம் தோல்வி., சரியான வசூல் இல்லை என்று சொல்லுவார்கள். நானும் நம்பத்தான் வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், தொடர்ந்து விஜய்சேதுபதிக்கும் அந்த ஆசை வந்திருச்சு?

முன்னோர் பெருமையை மூட்டை கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள் இளம் ஹீரோக்கள். ஏதோ, தமிழ்சினிமாவில் தலைப்பு வைக்க அவ்வளவு பஞ்சம் என்பதை...

Close