‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு?

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

மகளை தனியாகவோ அல்லது தோழிகளுடனோ ஃபாரினுக்கெல்லாம் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக இங்கே டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் கூட த்ரிஷாவின் மம்மிக்கு இப்படியொரு டயலாக் தேவைப்படவில்லை. ஆனால் சமீபகாலமாக இந்த ஒரே அட்வைசை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாராம் தனது மகளிடம். அவர் சேரக் கூடாது என்று அடக்கி வைக்கும் நண்பி அல்லது தோழி யாராக இருக்கும் என்பதை அப்புறம் பார்க்கலாம். ஏன் இப்படி சொல்கிறாராம்?

வேறொன்றுமில்லை, சென்ட்டிமென்ட்.

‘அந்த பொண்ணுக்குதான் யாரு கூடவும் ஒத்துப்போக மாட்டேங்குது. காதல் காதல்னு சுத்துது. ஆனால் ஒரு காதலும் கல்யாணம் வரைக்கும் போக மாட்டேங்குது. உனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்கோம். இந்த நேரத்தில் எதுக்கு அவ கூட சுத்துற?’ இதுதான் மம்மியின் அட்வைசாம். இந்த அட்வைஸ் கேட்டு தோழியை விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறாராம் த்ரிஷா. சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகிறது. போகிற போக்கில் நடிப்போமே என்று ஒரு படத்தில் வில்லியாக நடிக்கிறார். இன்னொரு படம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி. அவருடைய வயதை கருத்தில் கொண்டு சுமார் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினாராம்.

இதற்கப்புறம் படம் இல்லை. கல்யாணம்தான். இந்த நேரத்தில் பழசை அசை போடவும், படப்பிடிப்பில் நடந்ததை ஷேர் பண்ணவும் ஒரு நம்பிக்கையான தோழி வேண்டாமா? அதனால்தான் போட்டி பொறாமையெல்லாம் மறந்து, அதுவும் இப்போதுதான் நெருக்கமாக பழகுகிறார். இந்த நேரத்தில் சொந்த வீட்டிலிருந்தே சுடு தண்ணீர் கொதித்தால்?

மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் த்ரிஷா. ஆமாம்… அது யாரு தோழி. ஹுக்கும்… இன்னும் தெரியாதது போலவே கேட்டா எப்பூ…டி?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெரியாரிசம் டூ பெருமாளிசம்! விவேக்கின் ‘ஆத்திக’ அதிரடி!

இப்படி நகைச்சுவை நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகிட்டீங்கன்னா, அப்ப காமெடிக்கு நாங்க யாரை தேடுறது? இப்படியொரு கேள்வியை விவேக்கை பார்த்து கேட்க வேண்டிய நேரம் இதுதான். யெஸ்... அவரும்...

Close