பார்ட்டியில் மப்பு! த்ரிஷாவுக்கு கிஸ்சு! அவரை அடக்க ஆளே இல்லப்பா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நட்பு கிடைத்தாலும் சரி. அல்லது தொலைவிலிருந்தே ரசிக்கிற பாக்யம் கிடைத்தாலும் சரி. ஒரு 3டி பொழுதுபோக்கு சேனலை நேரடியாக தரிசித்த அனுபவம் கிட்டுவது மட்டும் திண்ணம்! சமீபத்தில் சென்னை வந்த மிஸ்டர் பாலு, ஸ்டார் கிரிக்கெட்டில் வெறும் பார்வையாளராக மட்டும் கலந்து கொண்டார். அதற்கப்புறமும் அவரது அன்னியோன்யம் நம்மூர் நடிகை நடிகர்களுக்கு வியப்பை அளித்ததை விவரிக்கவே முடியாது.

அன்றிரவே நடந்த பார்ட்டியில் தலைகுப்புற விழாத குறைதானாம். ஐயோ பாவம் அந்த நேரத்தில் அவரே தன் கையால் எடுத்து தன் வாயில் ஊட்டிக் கொள்ள முடியாதளவுக்கு பெரும் சிரமப்பட்டார் என்று உச் கொட்டுகிறது பார்ட்டியில் கலந்து கொண்ட ஓசி குடி வட்டாரம். ஒரு கவளம் பிரியாணி அவர் வாய்க்குள் செல்வதற்குள், ஸ்டார் ஓட்டலின் புளோர் மொத்தமும் அதை தின்று மிச்ச மீதி பருக்கைகளுக்குதான் அவர் வாய்க்குள் செல்கிற பாக்யம் கிடைத்ததாகவும் கிசுகிசுக்கிறது மேற்படி குரூப்.

அந்த பார்ட்டியும், பாலகிருஷ்ணாவும் நினைத்து நினைத்து சிரிக்கிற மாதிரி பல சந்தோஷங்களை தந்தது ஒரு புறம் இருக்கட்டும். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த நாயகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், பலத்த பப்ளிக் கூட்டத்திற்கு நடுவே த்ரிஷாவின் உதட்டில் இச் பதித்துவிட்டார் பாலகிருஷ்ணா. அவரது ரசிகர்கள் ஒரே கூச்சலிட்டு கொண்டாடிவிட்டார்கள் அந்த சம்பவத்தை. ஐயோ பாவம் த்ரிஷாதான். தமிழ்நாட்டில் குளித்து தலைமுழுகிவிட்டு வந்த மாதிரியே பம்மாத்து காட்டுவார் அவர். அங்கு இப்படியொரு பப்ளிக் அதிர்ச்சி. என்னதான் செய்வார் த்ரிஷா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Adra Machan Visilu Movie Stills

Close