இன்னும் படமே துவங்கல! அதுக்குள்ளே குடைச்சல்?

துணிச்சலே, உன் பெயர்தான் மைக்கேல் ராயப்பனா? இப்படியொரு கேள்வியை திரையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் பரவவிட்டவர் மைக்கேல் ராயப்பன். தேமுதிக விலிருந்து கழன்று கொண்ட முதல் வரிசை எம்.எல்.ஏக்களில் ஒருவரான இவருக்கு இப்போது மனசெல்லாம் பேரானந்தம். அதே கட்சியில இருந்திருந்தா இந்நேரம் டெபாசிட் தேறியிருக்காதே என்பதால்தான் அப்படியொரு ஆனந்தம்.

சரி.. துணிச்சல் என்று துவங்கிய செய்திக்கு வாரும் என்கிறீர்களா? சிம்புவை வைத்து அவர் ஒரு படம் இயக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்திற்காக அட்வான்ஸ் கொடுத்த நாளிலிருந்தே இவரை துணிச்சலே என்று அழைக்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரி. சுமார் 2 கோடியை அவருக்கு அட்வான்சாக கொடுத்து அமுக்கிய (?)…. மைக்கேல் ராயப்பன், மூச்சு முட்டுவாரா? கரை தட்டுவாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி. அட்வான்ஸ் கொடுக்கும் போது ஒரு டைரக்டர். இப்போது வேறொரு டைரக்டர் என்று மாறிவிட்டது நிலைமை.

ஷுட்டிங் எப்போது என்றும் தெரியவில்லை. அதற்குள் மூன்று முறை ஆபிசுக்கு வந்து போனாராம் சிம்பு. ஷுட்டிங்குக்கே ஒழுங்கா வராதவர் எதுக்குய்யா ஆபிசுக்கு வர்றார் என்று அலுவலக சிப்பந்திகள் அதிரி புதிரியாக யோசிக்க, அப்புறம்தான் புரிந்திருக்கிறது மேட்டர். “நீங்க என் சம்பளத்துலேர்ந்துதான் அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க. அது தனியா இருக்கட்டும். செலவுக்கு கொஞ்சம் பணம் வேணும்- தர்றீங்களா?” என்று கேட்டு கேட்டு இதுவரை மூன்று தவணைகளில் பதினைந்து லட்சம் வாங்கிவிட்டாராம் சிம்பு. இது எந்த கணக்கிலும் வராது என்பது மைக்கேல் ராயப்பனுக்கும் தெரியும். வேறு வழி?

இப்போதெல்லாம் சிம்பு ஆபிஸ் பக்கம் வந்தாலே, கொல்லை பக்கம் ஏதாவது வழி இருக்கிறதா என்று தேட ஆரம்பித்திருக்கிறாராம் மைக்கேல்.

1 Comment
  1. Sombhu Veriyan says

    Ivana vachi padam edutha idhu than kadhi… indha rayappan ku edhukku vendathe velai?? ganja kudi naai simbhu….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லாரன்ஸ் கேட்டார் ரஜினி என்ன சொன்னார்?

லாரன்ஸ் மனதில் ரஜினிக்கு எப்பவுமே ஸ்பெஷல் சிம்மாசனம்தான்! அவருடன் சேர்ந்து நடிக்கணும். அதிலும் அவருக்கு தம்பியாக என்றெல்லாம் ஆசைப்பட்டவருக்கு இன்று வரை ஏமாற்றம்தான் பதில். ஆனாலும் காலத்தை...

Close