ராசா வேஷத்துக்கு குட்பை! புத்துணர்வுடன் வடிவேலு
நமக்கு வாய்ச்சது இதுதான் போலிருக்கு என்று வடிவேலுவின் அதி தீவிர ரசிகர்கள் கூட வருத்தத்தோடு ஏற்றுக் கொண்ட படம் தெனாலிராமன். அந்த படத்தால் தயாரிப்பாளருக்கும் லாபமில்லை, வடிவேலுவுக்கும் லாபமில்லை, அட… படத்தை இயக்கினாரே, அவருக்காச்சும் லாபமா என்றால், பெரிய சைசில் ஒரு ஈமு முட்டைதான் விடையாக கிடைக்கும். அதற்கப்புறமும் விடாமல் ‘என் உடை வாளெங்கே?’ என்று உறக்கத்திலும் உளறிய வடிவேலு மெல்ல மெல்ல சிறகை சுருக்கி பூமிக்கு வந்துவிட்டார்.
உங்க உள் காயத்துக்கு ஏற்ற உடனடி மருந்து இதுதான் என்று யாரோ அவருக்கு அட்வைஸ்களை அள்ளிவிட்டு போயிருக்கலாம். தனது பழைய டூட்டே சரி என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். முதல் கட்டமாக அவரே சில தகவல்களை கோடம்பாக்கத்தில் கசிய விட்டிருக்கிறார். என்னவென்று? அண்ணன் நடிக்க தயாராயிருக்காரு.ன்னு தகவலை பரப்பி விடுங்கப்பா… என்று தனது ரதகஜதுரகபதாதிகளை ஏவி விட்டிருக்கிறார். அவர்களும் திறம்பட கூவியதன் விளைவு? கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.
இதற்காகதானே ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கி வரும் அந்த படத்தில், எல்லாரும் வின்னர், தலைநகரம் போன்ற இன்னபிற குலுங்க வைக்கும் வடிவேலுவை பார்க்கலாம் என்கிறார்கள். மனுஷன் மீண்டும் உடைவாளை தேடுறதுக்குள்ள அதை கடையில வச்சு பூட்டுங்கப்பா…!
//அவர்களும் திறம்பட கூவியதன் விளைவு? கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.
இதற்காகதானே ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கி வரும் அந்த படத்தில், எல்லாரும் வின்னர், தலைநகரம் போன்ற இன்னபிற குலுங்க வைக்கும் வடிவேலுவை பார்க்கலாம் என்கிறார்கள். //
இனிமேல்தான் நடிக்கப் போகிறாரா? அதுக்குள்ள குலுங்க வைக்கும்னு எப்படி சொல்லலாம்?