கவிஞரைச் சுற்றி கருமேகம்! நாளை நடக்கப் போவதென்ன?
சொடக்கு போடுகிற நேரத்தில் தமிழை மடக்கி போடுகிற வித்தை அறிந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவரது தமிழுக்கும் புலமைக்கும் வற்றாத இளமை உண்டு. அண்மைக்காலமாக வருகிற செய்திகள், அவருக்கு தமிழுக்கு மட்டுமா இளமை? அவரே இளமைதான் என்கின்றன. இத்தனை ஆண்டு காலமாக அவர் சேர்த்து வைத்திருந்த புகழிலும் பெருமையிலும் சென்ட் வாசத்திற்கு பதிலாக சேறு வாசம் வீச ஆரம்பித்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் காரணம் #METOO
யாருக்கெல்லாம் பாலியல் தொந்தரவுகள் நடந்ததோ, இந்த ஹேஷ்டாக்கில் சொல்லலாம் என்று ஒரு மும்பை நடிகை ஆரம்பித்து வைத்த நிஜ ஃபைட் இது. தமிழ்நாட்டில் புயல் வீச வைத்துவிட்டது.
வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு பெண் துவங்கி வைத்தார். அதை பாடகி சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதற்கப்புறம் ஒருவர் இருவர் ஆகி இருவர் பலர் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாருடைய ஆள்காட்டி விரலும் வைரமுத்து மீதே இருக்க… தடுமாறிப்போனது தமிழுலகம்.
கடைசியாக சின்மயி தன் தரப்பாக சொன்ன சில குற்றச்சாட்டுகள் பகீர் ரகம்.
2005 ல் சுவிட்சர்லாந்து சென்றிருந்தேன். நானும் மாணிக்கவிநாயகமும் பாடி முடித்தோம். ஓட்டலுக்கு போவதற்காக நானும் அம்மாவும் காத்திருந்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து வைரமுத்து தங்கியிருக்கும் ஓட்டலின் பெயரை சொல்லி அங்கு போய் அவருக்கு தேவையானதை கொடு என்றார். நான் போகவில்லை என்றால், இந்த நிகழ்ச்சியில் பாட வாய்ப்பும் இல்லை என்றார். நான் அந்த வாய்ப்பை உதறிவிட்டு இந்தியா திரும்பிவிட்டேன். இது சின்மயியின் ஸ்டேட்மென்ட்.
ஆனால் அதே சின்மயி 2015 ல் நடந்த தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தது ஏன்? அவரது காலில் விழுந்து வணங்கியது ஏன்? அந்த நிகழ்வில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டது ஏன்? இந்த கேள்விகளுக்கும் அவர்தான் விடை சொல்ல வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இன்று பதிலளித்திருக்கிறார் வைரமுத்து. அதுதான் கீழே.
”அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.”
ஒரு மாபெரும் குற்றச்சாட்டை இப்படி அசால்ட்டாக ஒரு பதிலை சொல்லிவிட்டு கடந்து போவது வைரமுத்துவின் குணம் குறித்த நம்பக தன்மைக்கு தகுந்ததாக இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
உலகம் சின்மயி பக்கம்தான் என்பதை இந்த ட்விட்டர் பதிவின் கீழ் இருக்கும் கமென்டுகளே உணர்த்துகின்றன. ஆயிரக்கணக்கான கமென்டுகளில் ஒன்று இரண்டை தவிர மீதி எல்லாமே வைரமுத்து மீது சரமாரியாக விமர்சனம் செய்யப்பட்டுதான் அமைந்திருக்கிறது.
‘இது ஒரு பொன்மாலைப்பொழுது…’ என்று சந்தோஷமாக அவருக்கு முகம் காட்டிய திரைவானம், இப்போது கருத்த நிறத்தில் கூடி நிற்கிறது. தண்ணீர் தெளித்து கழுவிவிடுமா? அல்லது ஆளையே சுனாமி போல கரைத்துவிடுமா? எல்லாமே காலத்தின் கையில்தானே இருக்கிறது?
virus muttu oru kaama veriyan. thaaaikkum thaaraththirkum verupaadu ariyadhavan. Keelmakan. vesiyai kudumbap pennaakap paarppavan. Idhu unmaiyum saththiyamum aakum.
matter muthu, oru audio function appuram, laxmi raiya his Carla yethikittu ponatha oodagangal perithu paduthavillai. Laxmi rai vayai thirapaara? illai laxmiyum matter raiya? Kelvi neenga bathil naanga la bathil sollunga anthanan. PLEASE