விக்னேஷ்சிவனின் சென்ட்டிமென்ட்! வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட சூர்யா?

நானும் ரவுடிதான் படம் ஹிட்டா, பிளாப்பா என்று கேட்டால்… விநியோகஸ்தர்கள் பக்கத்தில் 100 கைகள் மேலே தூக்கப்படும். ஆனால் தூக்கிய கைகளை சிங்கிள் ஆளாக கீழே பிடித்து இழுப்பார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். ‘ஹிட்டுதான்… ஆனா இல்ல’ டைப்பான விவாதம் அது. படத்தை தயாரித்த தனுஷுக்கு நாலு ஆட்டு புழுக்கைகள் கூட லாபமாக கிட்டவில்லை. ஆனால் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் அம்புட்டும் பொன்!

இருந்தாலும் ஹிட்டுதானே பேசும்? சூர்யாவே முன் வந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்து படமும் படு ஸ்பீடாக தயாராகிக் கொண்டிருக்கிறது. “செலவ கூட்டி வச்சுருவாரு. கண்ல விளக்கெண்ணை ஊற்றி கவனிங்கப்பா…” என்று மேலிட உத்தரவை அடுத்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் செலவை. இந்தப்படம் இந்தியில் வெளிவந்த ஸ்பெஷல் 26 என்ற படத்தின் ரீமேக்தானாம். தமிழில் சூர்யாவுடன் சுரேஷ்மேனனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்திப்படத்தில் அனுபம் கெர் நடித்த கேரக்டரில் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோதுதான் தன் சென்ட்டிமென்ட்டை கொண்டு வந்து உள்ளே புகுத்தியிருக்கிறார் விக்னேஷ்.

நானும் ரவுடிதான் படத்தில் ஒரு பெண் போலீஸ் கேரக்டர் இருந்தது. அதில் ராதிகா நடித்தார். அந்த சென்ட்டிமென்ட் அப்படியே இந்தப்படத்தில் தொடரணும் என்று வற்புறுத்திய விக்கி, அனுபம்கெர் கேரக்டரை அப்படியே பெண்ணாக மாற்றி அதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்துவிட்டார்.

“அப்படியே இருந்தா நல்லாயிருக்குமே?” என்ற சூர்யாவின் ஆசையை, பேசியே கரைத்தாராம் விக்கி.

நயன்தாராவையே கரைச்ச மனுஷன். சூர்யாவெல்லாம் எம்மாத்திரம்?

https://youtu.be/WZXkouraSpo

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மூடுங்க கமல்வேசன்! ஏறியடிக்கும் எடப்பாடி கோஷ்டி

Close