சூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி? விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்!

சூர்யாவிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல! பா.ரஞ்சித்திடம் ஸ்கிரிப்ட் புக் வாங்கிப் படித்த சூர்யா, அதில் பல டயலாக்குகளை அடித்து விட்டு, இந்தந்த இடங்களில் எல்லாம் திருத்திக் கொண்டு வாங்க என்று கூற, கண்ணீர் விடாத குறையாக கவலைப்பட்டார் பா.ரஞ்சித். அதற்கப்புறம் அவருக்கு ரஜினியே கிடைத்ததெல்லாம் காலம் தந்த கிரெட் கார்டு!

முதலில் “இது ஹீரோயின் சப்ஜெக்டாக இருக்கே?” என்று விக்னேஷ் சிவனையும் பதம் பார்த்து அனுப்பினார் சூர்யா. ‘நமக்கு கால்ஷீட் கிடைக்காது’ என்ற முடிவுக்கு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கொடுத்த ஊக்கத்தால் தானே ஹீரோ அவதாரம் எடுக்க தயாரானதும் நிஜமே! இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத டேர்னிங்.

கிளாஸ்… மாஸ்… என்று எப்போதும் மாறி மாறி படங்கள் செய்து வரும் சூர்யா, கிளாஸ் கமர்ஷியல் படமான இதை கணக்கில் எடுத்துக் கொள்ள நேர்ந்ததும் ஒரு கட்டாயத்தினால்தானாம்.

கொம்பன் முத்தையா, சூர்யாவுக்காக ரூம் போட்டு கதையை இழைத்து வருகிறார் அல்லவா? அந்தக்கதை, சரியான மாஸ் சப்ஜெக்ட். சிங்கம் 3 கண்டிப்பாக மாஸ் படம்தான். அதை முடித்ததும் அதே வேகத்தில் முத்தையா கதையை தொட்டால், சிக்கல் என்பதை புரிந்து கொண்ட சூர்யா மீண்டும் விக்னேஷ் சிவனை அழைத்தாராம். “60 நாட்கள் மட்டும்தான் கால்ஷீட். அதற்குள் என் போர்ஷனை முடிச்சுடணும். சரியா?” என்று கேட்க, சம்மதித்தாராம் விக்னேஷ்சிவன். அதுமட்டுமல்ல. முன்பு இவர் சொன்ன கதையில், சூர்யா கை வைத்த இடங்களை சரி செய்யவும் சம்மதித்தாராம்.

அதற்கப்புறம்தான் இந்த கூட்டணியை நாட்டுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

ஆகமொத்தம், அடுத்த பெஞ்சுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் கொம்பன் முத்தையா. அவரைப்போலவே தனது நடிப்பு ஆசையையும் அடுத்த ஒரு வருஷத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்!

மேட்டர் ப்னிஷ்…

To listen audio click below :-

https://www.youtube.com/watch?v=_3YagCgftAE&feature=youtu.be

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
vijay follows rajini in spiritual.

https://www.youtube.com/watch?v=Yeofu31v9YQ&feature=youtu.be  

Close